செஃபாலீ ஷா (Shefali shah பிறப்பு: ஜூலை 20, 1972), இவர் இந்திய நடிகை ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கிறார். 1995 நாடகத் திரைப்படமான ரங்கீலாவில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமான பிறகு, சத்யா படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்தார். சத்யா படத்தில் அவரது நடிப்புக்காகப் பாராட்டுக்களைப் பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் (விமர்சகர்) விருது பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான 44வது பிலிம்பேர் விருதுகளில் பெற்றார். குடும்ப நாடகத் திரைப்படமான வக்த்: த ரேஸ் அகெய்ன்ஸ்ட் டைம் (2005) இல் அவரது நடிப்பிற்காகச் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை
செஃபாலீ ஷா சூலை 1972 இல் பிறந்தார், சுதாகர் ஷெட்டி (முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர்) மற்றும் ஷோபா ஷெட்டி (குஜராத்தி குடும்பத்திலிருந்து ஒரு ஹோமியோபதி மருத்துவர்) அவர்களுக்கு பிறந்த ஒரே குழந்தை. மும்பை சாண்டா குரூஸில் ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் தனது இளமைப் பருவத்தை இவர் கழித்தார், அங்கு அவர் ஆர்யா வித்யா மந்திர், சாண்டாக்ரூஸ் பள்ளியில் படித்தார். அவர் துளு, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.
தொழில்
செஃபாலீ ஷா ரங்கீலா (1995) திரைப்படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமாகி நடித்தார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். கபீ கபீ என்ற தொடர் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
செஃபாலீ ஷா தொலைக்காட்சி நடிகர் ஹர்ஷ் சாயாவை மணந்தார். விவாகரத்து செய்த பிறகு, இயக்குனர் விபுல் அம்ருதாலால் ஷாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
வெளி இணைப்புகள்
நடிகை செஃபாலீ ஷா – விக்கிப்பீடியா