ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார். ஜுலை 2012 இல் , பிளேபாய் ” பத்திரிக்கையில் தான் தோன்றும் படம் வெளிவருவதாகக் கூறினார். பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்தியப் பெண்ணாக இவர் அறியப்படுகிறார். பின்னர் எம்டிவி நடத்திய ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியில் ஆறாவது பகுதியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். “பேட் கேர்ல் ” என்ற இசைத் தொகுப்பினை 2013 டிசம்பரில் வெளியிட்டார்.
இளமைக் காலம்
ஷெர்லின் சோப்ராவின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இளமையில் ஸ்டான்லி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் பின்னர், சிக்கந்தராபாத் செயின்ட் அன்னா மகளிர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். 1999 இல் “மிஸ் ஆந்திரா ” பட்டம் பெற்றுள்ளார்.
திரை வாழ்க்கை
இவர் ஆரம்ப காலங்களில் பாலிவுட் திரையுலகில் டைம்பாஸ், ரெட்ஸ் ஸ்வத்திக் மற்றும் கேம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர்ஆந்திரத் திரைப்படத் துறையில் “எ பிலிம் பை அரவிந்த் ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். “பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பகுதி 3 ல் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர்,அந்த நிகழ்ச்சியிலிருந்து 27 ஆம் நாளில் வெளியேற்றப்பட்டார். 2013இல் ரூபேஷ் பால் இயக்கத்தில் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2013 இல் நடந்த 66வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் திரையிடலின் போது பங்கேற்றார். அதற்குப் பின்னர் 2016 வரை சில காலம் எதிலும் பங்கேற்காமல் அமைதியாகவே இருப்பதாக ஷெர்லின் அறிவித்தார்.
நடித்த திரைப்படங்கள்
2002 | வெண்டி மப்பு |
---|---|
2002 | யுனிவர்சிட்டி |
2002 | பீப்பர் |
2005 | எ பிலிம் பை அரவிந்த் |
2005 | டைம் பாஸ் |
2005 | தோஸ்தி |
2006 | ஜவானி திவானி |
2006 | சம்திங் ஸ்பெஷல் |
2006 | நாட்டி பாய் |
2007 | கேம் |
2007 | ரக்கீப் |
2007 | ரெட் ஸ்வஸ்திக் |
2009 | தில் போலே ஹாப்பா! |
2014 | காமசூத்ரா 3டி |
2016 | வாஜா தும் கோ |
2017 | மாயா |
தொலைக்காட்சி
2009 | பிக் பாஸ் -3 |
---|---|
2013 | எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா – பகுதி 6 |