சுருதி மராத்தே (Shruti Marathe, பிறப்பு 9 அக்டோபர் 1986) என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மராத்தித் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தனது பணிகளுக்காக பெயர் பெற்றவர்
தொழில்
இவர் மராத்தி திரைப்படத் துறையில் சனாய் சௌகதே (2008) படத்தின் வழியாகவும், தமிழில் இந்திர விழா (2009) படத்தின் மூலமும் அறிமுகமானார். இவர் நடித்த பிற படங்கள் நான் அவனில்லை 2 (2009), குரு சிஷ்யன் (2010), ராம மாதவ் (2014), தப்தபாடி (2014), பந்த் நைலான் சே (2016), புதியா சிங் – பார்ன் டு ரன் (2016) ஆகும். ராம மாதவ் படத்தில் இவரது நடிப்பைப் பற்றி ஒரு விமர்சகர், “பார்வதிபாய் என்ற பாத்திரத்தில், சுருதி மராத்தே போரில் இறந்துவிட்ட தனது கணவர் போர் முடிந்து திரும்புவதற்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணாக சரியாக நடித்திருக்கிறார்” என்று கூறினார். திருட்டுப் பயலே (2006) படத்தின் கன்னட மறு ஆகமான ஆடு ஆட ஆடு மூலம் கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொலைக்காட்சி
நடித்த திரைப்படங்கள்
2008 | சனாய் சௌகதே |
---|---|
2009 | இந்திரா விழா |
நான் அவனில்லை 2 | |
ஆசா மி தாச மி | |
லகலி பைஜ் | |
2010 | குரு சிஷ்யன் |
2011 | டீச்சா பாப் தியாச்சா பாப் |
2012 | அரவான் |
சத்ய, சாவித்ரி அனி சத்யவன் | |
2013 | பிரேமசூத்ரா |
துஜி மஜி லவ் ஸ்டோரி | |
2014 | ராம மாதவ் |
தப்தபதி | |
2015 | மும்பை-புனே-மும்பை 2 |
2016 | பந்த் நைலான் சே |
புதியா சிங் – பார்ன் டு ரன் | |
2017 | வெட்டிங் ஆனிவசரி |
ஆடு ஆட்டா ஆடு | |
2020 | நாங்க ரொம்ப பிசி |
வெளி இணைப்புகள்
நடிகை சுருதி மராத்தே – விக்கிப்பீடியா