நடிகை சுவரா பாஸ்கர் | Actress Swara Bhaskar

சுவாரா பாஸ்கர் (பிறப்பு ஏப்ரல் 9, 1988) இந்திய நடிகை ஆவார் இரண்டு திரை விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


கடற்படை அதிகாரி உதய் பாஸ்கரின் மகளான சுவரா பாஸ்கர், டெல்லியில் பிறந்து வளர்ந்தார். தில்லி பல்கலைக் கழகத்திலிருந்து ஆங்கில இலக்கியத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பைப் பெற்றபிறகு, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமானமேட்ஹோல்ல் கீப் வாக்கிங்கில் ஓரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் அப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. தனு வெட்ஸ் மனு (2011) இல் மணமகள் என்ற தனது துணைப் பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார். இந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றார். அப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி சுவரா பாஸ்கர் பிறந்தார். இவரது தந்தை உதய பாஸ்கர், ஒரு தெலுங்கு இந்திய கடற்படை அதிகாரி. இவரது தாய் பிகாரி இரா பாஸ்கர், சினிமா ஆய்வுகள் பேராசிரியராக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவரது தாய்வழி பாட்டி வாரணாசியில் இருந்தார்.


சுவரா பாஸ்கர் தில்லியில் வளர்ந்தார். அங்கு சர்தார் படேல் வித்யாலயாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் இளங்கலை ஆங்கிலம் படித்தார். அங்கே படிக்கும் பொழுது மினிஷா லம்பா என்ற மற்றொரு நடிகர் அவருடன் படித்து வந்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகவியலில் தனது முதுகலைப் படிப்பை படித்தார்.


தயாரிப்பாளர்


2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தனது சகோதரர் இஷான் பாஸ்கருடன் அவர் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் கஹானிவாலேவைத் தொடங்கினார்.


வெளி இணைப்புகள்

நடிகை சுவரா பாஸ்கர் – விக்கிப்பீடியா

Actress Swara Bhaskar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *