நடிகை தீனா அம்பானி | Actress Tina Ambani

தீனா அம்பானி (Tina Ambani) (நினி முனிம் ) முன்னாள் பாலிவுட் நடிகை மற்றும் மும்பையைச் சார்ந்த கோக்கிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை, ஹார்பனி பார் சில்வர்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹார்மனி ஆர்ட் அறக்கட்டளைகளின் தலைவர். இவரது கணவர் அனில் அம்பானி , ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்.


தனிப்பட்ட வாழ்க்கை


மும்பையில் பிறந்த தீனா முனீம் குஜராத் ஜெயின் குடும்பத்தைச்சேர்ந்த நந்த்குமார் மற்றும் மீனாட்சி முனிம் ஆகியோரின் ஒன்பதாவது குழந்தை. 1975 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கர் நகரில் உள்ள எம். எம். பியுப்பில்ஸ் ஓன் பள்ளியில் படிப்பை முடித்தார். அதே ஆண்டில், ஃபெமினா பதின் இளவரசி இந்தியா 1975 போட்டியில் முதலிடம் வந்தார். அரூபாவில் நடந்த பதின் அழகுப்போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். பின்னர் அவர் ஜெய் ஹிந்த் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1970 களில், இந்தித் திரைப்படத் துறையில் சேர்ந்தார். பத்து வருட காலம் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.


1991 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசை நிறுவிய திருபாய் அம்பானியின் மகனான அனில் அம்பானியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; அன்மோல் டிசம்பர் 1991 இல் பிறந்தார், அன்சுல் 1995 செப்டம்பரில் பிறந்தார்.


தொழில் வாழ்க்கை


திரைப்படங்கள்


தீனா 1978 ஆம் ஆண்டில் இந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். தேவ் ஆனந்தின் டெஸ் பார்டஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தேவ் ஆனந்த் உடன் அவரது பிற திரைப்படங்கள் லூட்மார் மற்றும் மன் பசந்த் ஆகியவற்றில் நடித்தார். ராக்கி திரைப்படத்தில் சஞ்சய் தத்தின் கதாநாயகியாக முதன் முதலில் கதாநாயகியாக நடித்தார். கமல்ஹாசன் உடன் இந்தி மொழியில் 1984 ஆண்டில் ‘கரிசுமா’ எனும் படத்திலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

நடிகை தீனா அம்பானி – விக்கிப்பீடியா

Actress Tina Ambani – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *