வைபவி சாண்டில்யா (Vaibhavi Shandilya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், மராத்தி மொழி படங்களில் பணியாற்றுகிறார். மராத்தி திரைப்படமான ஜானிவா (2015) படத்தில் அறிமுகமான இவர், ஏக் அல்பேலா (2015), சக்க போடு போடு ராஜா (2017), இருட்டு அறையில் முரட்டு குத்து (2018), கேப்மாரி (2019) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொழில்
நடிகர் மகேஷ் மஞ்ச்ரேகரின் மகன் சத்யா அறிமுகமான படமும், சமூக நீதி குறித்த கதையைக் கொண்டதான மராத்தி திரைப்படமான ஜானிவா (2015) திரைப்படத்தில் வைபவி நடிகையாக அறிமுகமானார். பகவான் தாதாவின் வாழ்க்கை வரலாற்றான ஏக் அல்பேலாவில் வித்யா பாலன் உள்ளிட்ட நடிகர்களிடையே வைபவி நடித்தார், அதில் இவர் ஷாஹீன் என்ற முஸ்லீம் பெண்ணின் பாத்திரத்தை ஏற்றார்.
2016 ஆம் ஆண்டில், வைபவி எகிப்திய அரபு திரைப்படமான கஹெம் ஃபெ எல் ஹெண்டில் “தக் தின்னா” என்ற பாடலில் நடனக் கலைஞராக தோன்றினார். இதற்கு பிரபல இந்திய நடன நடன இயக்குனர் விஷ்ணு தேவா நடனமமைத்தார். வைபவி சந்தானம் நடித்த சர்வார் சுந்தரம் மற்றும் சக்க போடு போடு ராஜா ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். பிந்தைய படம் 2017 இல் வெளியிடப்பட்டது. முந்தைய படம் 2018இல் வெளியாக இருந்தது. வைபவி நடித்த ஒப்பந்தமான மூன்றாவது தமிழ் படமான கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படத்தில் நடிக்க 2018 இல் ஒப்பந்தமானார்.
நடித்த திரைப்படங்கள்
2015 | ஏக் அல்பேலா |
---|---|
2017 | சக்க போடு போடு ராஜா |
2017 | ராஜ் விஷ்ணு |
2017 | நெக்ஸ்ட் நுவ்வே |
2018 | இருட்டு அறையில் முரட்டு குத்து |
2019 | கேப்மாரி |
2020 | சர்வார் சுந்தரம் |
2020 | ஈசல் |
2020 | பட்டக்கி |
2020 | கலிபட்டா 2 |
வலைத் தொடர்
2019 | நிஷா |
---|
வெளி இணைப்புகள்
நடிகை வைபவி சாண்டில்யா – விக்கிப்பீடியா
Actress Vaibhavi Shandilya – Wikipedia