சோரா சேகல் அல்லது ஜோரா சேகல் (Zohra Sehgal, 27 ஏப்ரல் 1912 – 10 சூலை 2014) இந்தியத் திரைப்பட நடிகையும், நடன இயக்குநரும் ஆவார். சோரா சேகல் 1935 ஆம் ஆண்டில் உதய சங்கரின் நடனக் குழுவில் இணைந்து உள்ளூரிலும், அமெரிக்கா, சப்பான் போன்ற நாடுகளிலும் 8 ஆண்டுகள் நடனமாடினார். 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது 90ஆவது அகவையில் 2002 ஆம் ஆண்டில் சாலோ இஸ்க் லதாயே என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தர். ஆங்கில மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். பிரித்தானியாவில் ஐடிவி நிறுவனம் தயாரித்த மைன்ட் யுவர் லாங்குவேஜ் என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். தளபதி, உயிரே ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இறுதியாக 2007 ஆம் ஆண்டில் பாஜி ஆன் தி பீச், ஹம் தில் தே சுக்கே சனம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
1998 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருதும், 2001 இல் காளிதாஸ் சம்மன் விருதும், 2004 இல் சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது. இவரது வாழ்நாள் சாதனைக்காக சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவர் 2014 சூலை 10 இல் புது தில்லியில் இதய நிறுத்தம் காரணமாக தனது 102 வது அகவையில் காலமானார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகை சோரா சேகல் – விக்கிப்பீடியா
Actress Zohra Sehgal – Wikipedia