ஆதித்யா ராய் கபூர், இந்தி திரைப்பட நடிகர். ஆஷிக்கி 2 என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்தார்.
இளம்பருவம்
ஆதித்யா ராய் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர். இவரது உறவினர் பலர் திரைத்துறையில் பணியாற்றுகின்றனர். தொடக்கத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, பின்னர், திரைப்பட நடிகர் ஆனவா்.
திரைத்துறையில்
ஆதித்யா, சேனல் வி என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பேச்சுத் திறமையால் புகழ் பெற்றவர். குசாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2013இல் வெளியான ஆஷிக்கி 2 என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் பாடகராக நடித்திருந்தார். இந்த படம் அதிக வசூலைப் பெற்று, புகழ் சேர்த்தது. இதற்கு முன்னர் சில திரைப்படங்களில் நடித்திருந்த போதும், இதுவே இவரது முதல் வெற்றித் திரைப்படமாக விளங்கியது. பின்னர், யே ஜவானி ஹே திவானி என்ற திரைப்படத்தில், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழில் வெளியான் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படம், இந்தியில் வெளியாக உள்ளது. இதில் சமந்தாவுக்கு இணையாக நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2009 | லண்டன் டிரீம்ஸ் |
---|---|
2010 | ஆக்சன் ரீப்ளே |
2011 | குசாரிஷ் |
2013 | ஆஷிக்கி 2 |
2013 | யே ஜவானி ஹை திவானி |
வெளி இணைப்புகள்
நடிகர் ஆதித்யா ராய் கபூர் – விக்கிப்பீடியா
Actor Aditya Roy Kapur – Wikipedia