ராகவ் ஜூயால் (Raghav Juyal, பிறப்பு: ஆடி10, 1991) ஒரு இந்திய நடன இயக்குனரும், நடிகரும், நடனக்கலைஞரும் ஆவார். இவருடைய நடனங்கள் அனைத்தும் மெதுவான நடையுடன் ஒட்டியிருக்கும். அதாவது இவர் தன்னுடைய மெதுவான நடை மூலம் மக்களைக் கவர்வதால் இவர் “மெதுவான நடையின் ராஜா- King of slowmotion” எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் முதன்முதலாக ஜீடிவியில் ஒலிபரப்பாகிய “டான்ஸ் இந்தியா டான்ஸ்” இல் மூன்றாம் பருவத்தின் போது அதில்தன் திறமையை வெளிப்படுத்தினார். இதிலே இவர் “குறோக்குறோக்ஸ்” என்ற பெயரில் கலந்துகொண்டார். என் பெயரில் ஆங்கிலத்தில் “முதலை” மற்றும் “கரப்பான் பூச்சி) என்னும் இரு பெயர்களினதும் கூட்டாகும். இதன் அர்த்தம் முதலையை போன்று சக்தி வாய்ந்ததாகவும் கரப்பான் பூச்சியை கண்டவுடன் எப்படி பயத்தில் மக்களுக்கு புல்லரிக்குமோ என்ற பொருளிலே இந்த இரண்டு பெயரும் அர்த்தம் பெறும்.
இவர் “டான்ஸ் இந்தியா டான்சில்”, “டி ஐ டி லிட்டில் மாஸ்டர்”, “டான்ஸ்கே சூப்பர் கிட்ஸ்” என்ற இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவைகளில் இவர் “ராகவ்வின் ராக்ஸ்டார்” என்னும் பெயரில் கலந்து கொண்டார். இதில் “டான்ஸ் கே சூப்பர் கிட்ஸ்” என்ற நிகழ்வில் இவருடைய தலைமையில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.
நடித்த திரைப்படங்கள்
2014 | சோனாலி கேபிள் |
---|---|
2015 | ஏபிசிடி 2 |
2018 | நவாப்சாதே |
2020 | ஷ்ரீட் டான்ஸர் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
2011 | ச்சக் தூம் தூம் (பருவம் 2) |
---|---|
2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 2) |
2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் |
2012 | ஜீ கோலட் அவாட்ஸ் |
2012 | டான்ஸ் கே சுப்பர் கிட்ஸ் |
2013 | டான்ஸ் இந்தியா சூப்பர் மொம்ஸ் |
2013 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) . |
2014 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் 3 |
2014 | டானஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) |
2015 | டான்ஸ் இந்தியா டான்ஸ் சூப்பர் மொம்ஸ் 2 |
2015 | நாச் பலியே 7 |
2015 | நாச் பலியே 7 |
2015 | டான்ஸ் பிளஸ் |
2015 | லைவ் ஓக்கே ப்பிரேம் கி டீவாலி |
2016 | இஷ்க்கியாவோன் டிஷ்க்கியாவோன் |
2016 | கத்ரோன் கே கில்லாடி |
2016 | டைம்லெஸ் ஆஷா |
2016 | ஸ்டார் பரிவார் அவாட்ஸ் |
2016 | களர்ஸ் தங்கஇதழ் விருதுகள் |
2016 | டான்ஸ் பிளஸ் 2 |
2017 | றைஸிங் ஸ்டார் (இந்திய தொலைக்காட்சி நாடகம்) |
2017 | டான்ஸ் பிளஸ் 3 |
2017 | கலர்ஸ் தங்க இதழ் விருதுகள் |
2017 | நடன வெற்றியாளர்கள் (டான்ஸ் சம்பியன்ஸ்) |
2017 | பொழுதுபோக்குக்கான இரவு (என்டர்டைமன் கி ராத்) |
2017/2018 | சூப்பர் டான்ஸர் |
2018 | தில் ஹே ஹிந்துஸ்தானி (பருவம் 2) |
2018/2019 | டான்ஸ்பிளஸ் 4 |
2019 | கத்தரா கத்தரா கத்தரா (khathra khathra khathra ) |
வெளி இணைப்புகள்
நடிகர் ராகவ் ஜூயால் – விக்கிப்பீடியா