நடிகர் ராஜேஷ் கன்னா | Actor Rajesh Khanna

ராஜேஷ் கன்னா ( Rajesh Khanna, பிறப்பு ஜதின் கன்னா, திசம்பர் 29, 1942 – சூலை 18,2012) ஓர் இந்தித் திரைப்பட நடிகர், இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காங்கிரசு அரசியல்வாதி.


1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.


அரசியல் மற்றும் வணிக பணிவாழ்வு


ராஜேஷ் கன்னா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 1992இல் நடந்த இடைத்தேர்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து தனது இறுதிக்காலம்வரை காங்கிரசின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுத்து வந்தார்.


கன்னாவும் அவரது வெளிநாட்டு நண்பர்களும் சீரடியில் பக்தர்கள் தங்கி வழிபட தங்குவிடுதிகளைக் கட்டத் திட்டமிட்டனர்.


உடல்நலம்


ஜூன், 2012இல் கன்னாவின் உடல்நலம் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. 2012 ஜூன் 23 அன்று சில உடல்நலக்கேடுகளுக்காக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பிய கன்னா மறுநாள், ஜூலை 18, 2012 அன்று சிகிட்சை பலனின்றி காலமானார்.

வெளி இணைப்புகள்

நடிகர் ராஜேஷ் கன்னா – விக்கிப்பீடியா

Actor Rajesh Khanna – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *