நடிகர் ரன்விஜய் சிங் | Actor Rannvijay Singha

ரன்விஜய் சிங் சிங்கா (பிறப்பு: 16 மார்ச், 1983) இவர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர். 2003ம் ஆண்டு எம்டிவி ரோடீஸ் சீசன்-1 நிகழ்ச்சியின் வெற்றியளார் ஆவார். மேலும் இவர் எம்டிவி இந்தியாவின் வி.ஜே ஆகவும் இருந்து வருகிறார்.


ஆரம்பகால வாழ்க்கை


ரண்விஜய் சிங்கின் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர், மேலும் இவருடைய தம்பி கப்பற்படையில் பணிபுரிகிறார். இவர் தனது பட்டப்படிப்பை டெல்லியில் உள்ள சார்ந்த ஹன்ஸ் ராஜ் கல்லூரியில் முடித்தார். மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் ஒரு கட்டுமான தொழிலாளராக பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்டிவி வீ.ஜே. வாழ்க்கை


பிரபலமான ரியாலிட்டி ஷோவான எம்டிவி ரோடீஸ் சீசன் ஒன்றின் வெற்றியாளார். பின்னர் அந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.


மேலும் அவர் எம்டிவி ஸ்கூட்டி பெப் டீன் திவா என்ற நிகழ்ச்சியையும் எம்டிவி ஸ்பில்ட்ஸ்வில்லா என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில் அவர், எம்டிவி ஃபோர்ஸ் இந்தியா – தி ஃபாஸ்ட் அண்ட் தி கார்ஜியஸ் என்ற மற்றொரு எம்டிவி இந்தியா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.


திரைப்பட வாழ்க்கை


இவர் 2009ம் Toss: A Flip of Destiny என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதை தொடர்ந்து லண்டன் ட்ரீம்ஸ் என்ற திரைப்படத்தில் சல்மான் கான், அஜய் தேவ்கான் மற்றும் அசின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


2011ம் ஆண்டு Dharti என்ற பஞ்சாபி மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். 2014ம் Mango என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புகள்

நடிகர் ரன்விஜய் சிங் – விக்கிப்பீடியா

Actor Rannvijay Singha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *