ரிஷி கபூர் (Rishi Kapoor; 4 செப்டம்பர் 1952 – 30 ஏப்ரல் 2020)ஒரு இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் இயக்குநரும் ஆவார். இவர் தனது தந்தை ராஜ் கபூரின் 1970 மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருந்தைப் பெற்றார். 1973 இல் பாபி திரைப்படத்தில் முதன் முறையாகக் கதாநாயகனாக நடித்து சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
1973 இற்கும் 2000 இற்கும் இடையில் 93 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். 2008 இல் இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இவர் தனது மனைவி நீது சிங்குடன் 1973 முதல் 1981 வரை 12 திரைப்படங்களில் நடித்தார். இவர் 2020 ஏப்ரல் 30 அன்று குருதிப் புற்றுநோய் காரணமாக தனது 67 வது அகவையில் காலமானார்.
ஆரம்பகால வாழ்க்கை
மும்பையில் பிறந்த கபூர், பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூரின் இரண்டாவது மகன்.
அவருடைய சகோதரர்களும் புகழ்பெற்ற நடிகர்களாவார்கள்: ரந்திர் கபூர் மற்றும் ராஜீவ் கபூர். இவர் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையாவார். இன்றைய நடிகைகளான கரீஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோரின் தந்தையின் சகோதரராவார் ரிஷி. அவர் பஞ்சாப் இந்து காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர்.
வாழ்க்கைத் தொழில்
ரிஷி கபூர் முதல் முறையாக தன்னுடைய தந்தையின் 1970 ஆம் ஆண்டுத் திரைப்படமான மேரா நாம் ஜோக்கர் (என் பெயர் ஜோக்கர்), என்ற படத்தில் தன்னுடைய தந்தை சிறுவனாக வரும் கதாபாத்திரத்தில் தோன்றினார். ரிஷி கபூருக்கு முதல் கதாநாயகன் பாத்திரம் டிம்பிள் கபாடியாவுடன் 1973 ஆம் ஆண்டின் பிரபலத் திரைப்படமான பாபியில் துவங்கியது, இது இளைஞர்களிடம் உடனடி பிரபலத்தை ஏற்படுத்தியது. அதுமுதற்கொண்டு அவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தோன்றியுள்ளார். தாமதமாக வெளியிடப்பட்ட கரோபார்: தி டிஸ்மிஸ் ஆஃப் லவ்வுடன் 2000 ஆம் ஆண்டு வரை இளம் நடிகைகளைக் காதலிக்கும் கதாநாயகனாக நடித்து வந்தார். ஹம் தும் (2004) மற்றும் ஃபானா (2006) திரைப்படத்துடன் அவர் துணை கதாபத்திரங்களுக்கு மாறிவிட்டார். அவர் 1998 ஆம் ஆண்டில் ஆ அப் லௌட் சலேன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார், இதில் ராஜேஷ் கன்னா, ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா, காதர் கான், பரேஷ் ராவல் மற்றும் ஜஸ்பல் பாட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் அவர் தோன்றியது நமஸ்தே லண்டன் மற்றும் ஒரு ஆங்கில மொழித் திரைப்படமான டோண்ட் ஸ்டாப் ட்ரீமிங் , இது அவருடைய சகோதரர் (ரிஷியின் சிற்றப்பா ஷம்மி கபூர் மகன்) ஆதித்யா ராஜ் கபூர் அவர்களால் இயக்கப்பட்டது. இவர் மிகவும் திறமைவாய்ந்த நடிகர் கமல்ஹாசனுடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்தத் திரைப்படம் அதிகாரபூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
அவர் ‘சிண்டு ஜி’ என்ற திரைப்படத்தில் ரிஷி கபூராகவே நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அவருடைய தந்தை ராஜ் கபூர், தாய், மனைவி மற்றும் அவருடைய முந்தைய படங்களான சாந்தினி, மேரா நாம் ஜோக்கர் மற்றும் இதரவை தொடர்பான குறிப்புகளைக் கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
ரிஷியுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த நீத்து சிங் உடன் ஏப்ரல் 13, 1979 அன்று நிச்சயம் செய்யப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நீத்து சிங் நடிப்பதை நிறுத்தி விட்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்: ரன்பிர் கபூர், இவரும் ஒரு நடிகர் மற்றும் ரிதிமா கபூர். இவர்களில் ரன்பீர் கபூர் தற்போது கதாநாயகனாகி விட்டார். சாவரியான் என்ற படத்தில் துவங்கிய இவரது திரை வாழ்க்கை அஜப் பிரேம் கி கஜப் கஹானி போன்ற படங்களின் வழி தொடர்கிறது. தற்போதுள்ள முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ரன்பீர் திகழ்கிறார்.
விருதுகள்
1970 – BFJA சிறப்பு விருது மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்திற்கு
1971 – சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியத் திரைப்பட விருது மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்திற்கு
1973 – பிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருது பாபி திரைப்படத்திற்கு
2006 – வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினி விருது
2007 – MTV லைக்ரா விருதுகள்: 2006 ஆம் ஆண்டுக்கான மஹா ஸ்டைல் ஐகான்
2008 – பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
2008 – FICCI “லிவிங் லிஜெண்ட் இன் என்டெர்டெய்ன்மெண்ட்” விருது
2008 – 10வது மும்பை அகாடமி ஆஃப் தி மூவிங் இமேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் (M.A.M.I) இல் வாழ்நாள் சாதனையாளர் விருது
2009 – திரைப்படங்களில் பங்களித்தமைக்காக ரஷ்ய அரசால் கௌரவிக்கப்பட்டார்
திரைப்படப் பட்டியல்
மேரா நாம் ஜோக்கர் (1970) ஸிமி
பாபி (1973) டிம்பிள் கபாடியா
ஜிந்தா தில் (1975)
ராஜா (1975) சுலக்ஷனா பண்டிட்
ரஃபூ சக்கர் (1975) நீடு சிங்
கேல் கேல் மே (1975) நீடு சிங்
ரங்கீலா ரதன் (1976) பர்வீன் பாபி
லைலா மஜ்னு (1976) ரஞ்சிதா
ஜின்னி அவுர் ஜானி
பரூத் (1976) ரீனா ராய்/ஷோமா ஆனந்த்
கபி கபி (1976) நீடு சிங்/நசீம்
ஹம் கிசி சே கம் நஹி (1977) ஜீனத் அமன்/காஜல் கிரன்
தூஸ்ரா ஆத்மி (1977) நீடு சிங்
சலா முராரி ஹீரோ பனே (1977)
அமர் அக்பர் அந்தோனி (1977) நீடு சிங்
பூல் கிலே ஹைன் குல்ஷன் குல்ஷன் (1978) மௌஷ்மி
பதி பத்தினி அவுர் வோ (1978)
ஜெஹ்ரீலா இன்ஸான் (1978) நீடு சிங்/மௌஷ்மி
நயா தௌர் (1978)
பதல்தே ரிஷ்தே (1978) ரீனா ராய்
அன்ஜானே மே (1978)
சர்கம் (1979) ஜெய பிரதா
சலாம் மேம்ஸாப் (1979)
ஜூடா கஹின் கா (1979) நீடு சிங்
துனியா மேரி ஜேப் மே (1979) நீடு சிங்
ஆப் கே தீவானே (1980) டினா முனிம்
தோ பிரேமீ (1980) மௌஷ்மி
தன் தௌலத் (1980)
கர்ஸ் (1980) டினா முனிம்
கடிலோன் கி காடில் (1981) டினா முனிம்
நசீப் (1981) கிம்
பீவி-ஓ-பீவி: தி ஃபன் பிலிம் (1981) பூனம் தில்லான்
ஜமானா கோ திகானா ஹை (1981) பத்மினி கோல்ஹாபூர்
யே வாதா ரஹா (1982) டினா முனிம்/பூனம் தில்லான்
தீதர்-ஈ-யார் (1982) டினா முனிம்
ப்ரேம் ரோக் (1982) பத்மினி கோல்ஹாபூர்
படே தில் வாலே (1983) டினா முனிம்
கூலி (1983) ஷோமா ஆனந்த்
துனியா (1984) அம்ரிதா சிங்
ஆன் அவுர் ஷான் (1984)
யேஹ் இஷ்க் நஹி ஆசான் (1984) பத்மினி கோல்ஹாபூர்
சிதாம்கர் (1985) பூனம் தில்லான்
ஸாகர் (1985) டிம்பிள் கபாடியா
ராஹி பதல் கயே (1985)
நசீப் அப்னா அப்னா (1986) ஃபாராஹ்/ராதிகா
நாகினா (1986) ஸ்ரீதேவி
ப்யார் கே கபில் (1987) பத்மினி கோல்ஹாபூர்
ஹவாலாட் (1987) மந்தாகினி
சிந்தூர் (1987) ஜெய பிரதா
வோஜ்வ்ரஷ்செனியே பாக்தாத்ஸ்கோகோ வோரா (1988)
விஜய் (1988) சோனம்
ஜனம் ஜனம் (1988) வினிதா கோயெல்
ஹமாரா காந்தான் (1988) ஃபாராஹ்
கர் கர் கி கஹானி (1988) ஜெய பிரதா/அனிதா ராஜ்
நகாப் (1989) ஃபாராஹ்
ஹத்யார் (1989) சங்கீதா பிஜ்லானி
சாந்தினி (1989) ஸ்ரீதேவி
படே கர் கி பேட்டி (1989) மீனாக்ஷி சேஷாத்ரி
பராயா கர் (1989)
கோஜ் (1989) கிமி கட்கர்
சேஷ் நாக் (1990) மந்தாகினி
ஷெர் தில் (1990)
அஜாத் தேஷ் கே குலாம் (1990) ரேகா
அமிரி கரிபி (1990) நீலம்
கர் பரிவார் (1991)
அஜூபா (1991) சோனம்
ஹென்னா (திரைப்படம்) (1991) ஜெபா பக்தியார்/அஷ்வினி பேவ்
ரன்பூமி (1991) நீலம்
பன்ஜாரன் (1991) ஸ்ரீதேவி
போல் ராதா போல் (1992) ஜூஹி சாவ்லா
தீவானா (1992) …. திவ்யா பாரதி
ஸ்ரீமான் ஆஷிக் (1993) உர்மிளா மடன்ட்கர்
சாஹிபான் (1993) மாதுரி திக்ஷிட்/சோனு வாலியா
குருதேவ் (1993) ஸ்ரீதேவி
அன்மோல் (1993) மனிஷா கோய்ராலா/சுஜாதா மெஹ்தா
தாமினி – லைட்னிங் (1993) மீனாக்ஷி சேஷாத்ரி
தார்திபுத்ரா (1993) ஜெய பிரதா
இஸ்ஸாத் கி ரோட்டி (1993)ஜூஹி சாவ்லா
மொஹப்பத் கி அர்ஸூ (1994) அஷ்வினி பேவ்
ஈனா மீனா டீகா (1994) ஜூஹி சாவ்லா
சாஜன் கா கர் (1994) ஜூஹி சாவ்லா
பெஹ்லா பெஹ்லா பியார் (1994) தபு
ப்ரேம் யோக் (1994) மது
சாஜன் கி பாஹோன் மே (1995) தபு/ரவீனா டான்டன்
ஹம் தோனோ (1995) பூஜா பட்
யாரானா (1995) மாதுரி திக்ஷிட்
ப்ரேம்க்ரந்த் (1996) மாதுரி திக்ஷிட்
தரார் (1996) … ஜூஹி சாவ்லா
கோன் ஸச்சா கோன் ஜூதா (1997) ஸ்ரீதேவி
ஜெய் ஹிந்த் (1999) ரவீனா டான்டன்
கரோபார்: தி பிசினஸ் ஆஃப் லைஃப் (2000) ஜூஹி சாவ்லா
ராஜு சாச்சா (2000) …
குச் காட்டி குச் மீத்தி (2001) ரதி அக்னிஹோத்ரி
ஹே ஹை ஜால்வா (2002) ரதி அக்னிஹோத்ரி
குச் தோ ஹை (2003) .. கனு கில்
லவ் அட் டைம்ஸ் ஸ்கோயர் (2003) தனுஜா
தெஹ்சீப் (2003) ஷபானா அஸ்மி
ஹம் தும் (2004) ரதி அக்னிஹோத்ரி
ப்யார் மே ட்விஸ்ட் (2005) டிம்பிள் கபாடியா
ஃபனா (2006) கிர்ரோன் கெர்
டோண்ட் ஸ்டாப் ட்ரீமிங் (2007)
நமஸ்தே லண்டன் (2007)
ஓம் ஷாந்தி ஓம் (2007) சிறப்புத் தோற்றம்
சம்பார் சல்சா (2007)
ஏர்போர்ட் (2008)
கலாஷ் (2008)… சிறப்புத் தோற்றம்
தோடா ப்யார் தோடா மேஜிக் (2008)
லக் பை சான்ஸ் (2008) ஜூஹி சாவ்லா
டெல்லி 6 (2009) தன்வி அஸ்மி
லவ் ஆஜ் கல் (2009) நீடு சிங்
கல் கிஸ்னே தேகா (2009)
சின்டுஜி (2009)
வெளி இணைப்புகள்
நடிகர் ரிஷி கபூர் – விக்கிப்பீடியா
Actor Rishi Kapoor – Wikipedia