ரித்தேஷ் தேஷ்முக் இவர் ஒரு இந்தியத்திரைப்பட நடிகர் ஆவர். இவர் மறைந்த அரசியல்வாதி விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் வைஷாலி தேஷ்முக் மகன் ஆவர். இவர் நடிகை ஜெனிலியா காதலித்து 2012ம் திருமணம் செய்து கொண்டார். இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்து பல விருதுகளை வென்றார்.
வாழ்க்கை
இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த அரசியல்வாதி விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் வைஷாலி தேஷ்முக் மகன் ஆவர். இவர் துஜே மேரி கஸம் என்ற திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஜெனிலியா காதலித்து 2012ம் திருமணம் செய்து கொண்டார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் 2003ம் ஆண்டு துஜே மேரி கஸம் என்ற திரைபடத்தின் முலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இதில் இவருக்கு ஜோடியாக இவரின் காதல் மனைவி ஜெனிலியா நடித்துள்ளார். அதன் பிறகு அவுட் ஒப் கொன்றோல் என்ற திரைபடத்தில் நடித்தார்.
2004ம் ஆண்டு மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார் இவ் திரைபடத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, இவ் படத்துக்கு இவர் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார்.
அதன் பிறகு இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று இவர் பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகரானார்.
2012ம் ஆண்டு (தேரே நாள் லவ் ஹோ காய) என்ற படத்தில் தனது மனைவி ஜெனிலியாயுடன் ஜோடி சேர்த்து நடித்தார்.
இவர் தற்போது லை பாரி என்ற மராத்தி மொழி திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார் இது இவரின் முதல் மராத்தி மொழி திரைப்படம் ஆகும்.