ஷாஹித் கபூர் இந்தி: शाहिद कपूर1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி டெல்லி இந்தியாவில் பிறந்தார். இவர் ஒரு பாலிவூட் நடிகர் மற்றும் தேர்ந்த நடன கலைஞர் ஆவார்.
இசை நிகழ்படங்கள் மற்றும் விளம்பரங்களில் வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை துவக்கினார். கபூர் 1999 இல் வெளிவந்த சுபாஷ் கையின் தால் என்ற படத்தில் பின்னணி நடன கலைஞராக பாலிவூட்டில் அறிமுகமானார். நான்கு வருடங்கள் கழித்து 2003 இல் வெளிவந்த இஷ்க் விஷக் என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அவருடைய நடிப்பு திறமைக்காக பிலிம் பேர் சிறந்த ஆண் அறிமுக நாயகன் விருதை பெற்றார். 2004 இல் பிடா மற்றும் 2005 இல் ஷிகார் ஆகிய படங்களில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். 2006 இல் சூரஜ் ர.பர்ஜத்யவின் விவாஹ் இவருடைய முதல் வணிக ரீதியிலான வெற்றிப் படமாகும். அதைத் தொடர்ந்து 2007 இல் ஜப் வி மெட் மற்றும் 2009 இல் வெளிவந்த காமினி ஆகியவை வணிக ரீதியிலான மிகப்பெரிய வெற்றி படங்களாகும்.
தொழில் வாழ்க்கை
ஆரம்ப கால வாழ்க்கை, 2005 வரை
நடிகராக தன்னுடைய பணியை தொடங்குவதற்கு முன்னால் கபூர் நிறைய இசை நிகழ்படங்கள் மற்றும் விளம்பரங்களில் வேலை செய்தார். ஷாருக் கானுடன் பெப்சி விளம்பரத்திலும் கஜோல் மற்றும் ராணி முகர்ஜியுடன் 1998 இல் குச் குச் ஹோதா ஹை யிலும் நடித்தது ஆகியன இதில் அடங்கும். இவ்வாறு நடித்து கொண்டிருக்கும் போது ஷியாமக் தவர் இன்ஸ்டிடுட் பார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ்-ல் (SDIPA) சேர முடிவு செய்தார். பிறகு சுபாஷ் கையின் தால் (1999) என்ற படத்தில் கஹின் ஆக் லகே லாக் ஜாவே என்ற பாடலில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து பின்னணி நடனக் கலைஞராக தோன்றினார். அதன் பின் யாஷ் ராஜ் நிறுவன தயாரிப்பான “தில் தோ பாகல் ஹை” (1999) படத்தில் கரீஷ்மா கபூருடன் இணைந்து நடித்தார்.
2003 இல் கபூர் முதன் முதலில் முன்னணி கதாபாத்திரமாக நடித்தார். கேன் க்ஹோஷின் வெற்றிகரமான காதல் கதையான இஷ்க் விஷ்கி ல் ராஜீவ் மதூர் என்ற கவலையில்லா இளைஞராக நடித்திருந்தார். அம்ரிதா ராவ் மற்றும் ஷேனாஸ் த்ரியசூர்யவால ஆகியோருடன் இணைந்து நடித்த இப்படம் மக்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் கபூருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது. இந்திய பண்பலையை சேர்ந்த சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ்,” ஷாஹித் கபூர் ஒரு கவனிக்கத்தக்க நடிகர் ஆவார் என்று எழுதியுள்ளார். உயர்ந்த இடத்தை அடைய இவர் எல்லா தகுதியையும் கொண்டுள்ளார். தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும் [sic] கூட அழகானவர். மிக தத்ரூபமான நடிப்பை வழங்கும் இந்த இளைஞர், உணர்ச்சிமிக்க பாத்திரங்களிலும் கூட அனாயசமாக நடிக்கும் திறன் கொண்டவர். இவர் ஒரு விதிவிலக்கான நடன கலைஞர் ஆவார். இவர் செய்ய வேண்டியது என்னவெனில் எதிர் வரும் படங்களில் தன்னுடைய பாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பதாகும். இவ்வாறு செய்வாரெனில் இவர் தன்னுடைய பயணத்தில் உயர்ந்த இடத்தை அடையலாம்.
தொடர்ந்த வருடத்தில் கபூர் இயக்குனர் கேன் க்ஹோஷுடன் மீண்டும் இணைந்து பிடா என்ற திகில் படத்தில் நடித்தார். இவருடன் கரீனா கபூர் மற்றும் பார்தீன் கான் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் சரியாக போகவில்லை எனினும் கபூரின் நடிப்பு பாராட்டப்பட்டது. விமர்சகர்களின் குழு இறுதியாக கூறியது,”…ஷாஹித் கபூர் தன்னுடைய கதா பாத்திரங்களில் மிளிர்கிறார். இவர் புத்துணர்ச்சியாக காணப்படுகிறார். திடீர் உணர்ச்சிகளுக்கு உள்ளாகிற மற்றும் ஒன்றும் அறியாத இளைஞன் ஒருவன் இதன் காரணமாக குற்றம் செய்கிற வேடத்தில் நம்முடைய பரிதாபத்தை பெரும் அளவிற்கு நன்றாக நடித்து உள்ளார். இதன் பிறகு இவர் காதல் காமெடி படமான தில் மாங்கே மோர் ல் சொஹா அலி கான், துலிப் ஜோஷி மற்றும் அயீஷா தகியா ஆகியோருடன் தோன்றினார். இவருடைய நடிப்பு பல்வேறுபட்ட கலவையான விமர்சனங்களுக்கு உள்ளானது. “ஷாஹித், ஷாருக் கானை பெருமளவு பின்பற்றுகிறார் என்று Rediff.com எழுதியது. இவர் ஒரு சில காட்சிகளில் நன்றாகவும் மற்றதில் மிகையாகவும் நடித்திருந்தார்”
2005 இல் மேலும் மூன்று படங்களில் நடித்து கபூர் வெற்றியை தொடர்ந்தார். எவ்வாறாயினும், ஜான் M.மத்தனின் ஷிகார் என்ற கதையில் பணம் மற்றும் பேராசையால் ஈர்க்கப்படும் ஜெயதேவ் வர்தன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டார். இதன் மூலம் கபூரின் பெயர் முதன் முதலாக சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியன் பண்பலை யின் கூற்றுப்படி, “ஒவ்வொரு படத்திலும் ஷாஹித் கபூர் தன்னை மேம்படுத்திக் கொள்கிறார். இவர் அனைத்து சமயங்களிலும் அஜெயோடு பொருந்துகிறார்.
சாதனைகள், 2006 முதல் – தற்பொழுது வரை
2006 இல் கபூர் 36 சீனா டவுன் என்ற படத்தில் நடித்தார். தனியான ஏழு நபர்கள் மற்றும் ஒரு கொலை இதை சுற்றி நடக்கும் இந்த கதை சுமாரான வெற்றியையும் கலந்த விமர்சனங்களையும் கொண்டு வந்தது. இந்த படம் வெளி வந்த சிறிய இடைவெளியில் பிரியதர்ஷனின் சுப் சுப் கே என்ற காமெடி படம் கபூருக்கு அந்த ஆண்டில் இரண்டாவது படமாக அமைந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிதமான வெற்றியை பெற்றது.
2006 ஆம் ஆண்டு இறுதியில் கபூர் நடித்த காதல் படமான விவாஹை சூரஜ் ர. பர்ஜத்ய இயக்கி இருந்தார். நிச்சயதார்த்ததிற்கும் திருமணத்திற்கும் இடையில் உள்ள காலத்தில் இருவருக்கும் நடக்கும் நிகழ்வுகளே இப்படத்தின் கதை ஆகும். அம்ரிதா ராவுடன் இணைத்து நடித்த இத்திரைப்படம் சாதகமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.மேலும் அந்த ஆண்டின் அதிக வசூலை வாரி குவித்து கபூருக்கு அன்றைய தேதியில் மிக பெரிய வணிக ரீதியிலான வெற்றிப்படமாக அமைந்தது. கபூரின் இந்த நடிப்புக்காக அவரது பெயர் ஸ்டார் ஸ்க்ரீன் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டது. தரன் ஆதர்ஷ்,” ஷாஹித் கபூர் இதற்கு முன் இப்படி நடித்ததில்லை என்று எழுதினார். இஷ்க் விஷ்கி ல் அமைதியான வேடத்திலும் சிறப்பான நடிப்பை பிடா விலும் கவனிக்கத்தக்க வகையில் அமைந்த விவாஹி லும் ஒரு உன்னதமான நடிகரின் வளர்ச்சியை காணலாம். தொடர்ச்சியான உணர்ச்சிமிக்க தொகுதியில் இவர் விதிவிலக்கானவர்.
2006 ஆம் ஆண்டு கோடையில் கபூர் தனது முதல் உலக பயணமான ராக்ஸ்டார் கான்செர்ட் டில் பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான் கரீனா கபூர் ஜான் ஆபிரகாம் இசா தியோல், மல்லிகா ஷராவத் மற்றும் சயேத் கான் ஆகியோருடன் மேற்கொண்டார்.
2007 இல் கபூர் இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இவரது முதல் வெளியீடு அஹ்மத் கானின் பூல் அண்டு பைனல் ஆகும். இந்த படம் எதிர் விமர்சனங்களை கொண்டு வந்தது மற்றும் பாக்ஸ் ஆபீசில் சரியான இடத்தை பிடிக்கவில்லை. இத்திரைப்படத்தில் கபூரின் நடிப்பு நேர் விமர்சனங்களை கொண்டு வரவில்லை. இவருடைய அடுத்த வெளியீடு இம்தியாஸ் அலியின் நகைச்சுவை காதல் படமான ஜப் வி மேட டில் கரீனா கபூருடன் இணைந்து நடித்த இப்படம் அந்த ஆண்டின் மிக சிறந்த வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையானது இரண்டு வெவ்வேறு குணமுடைய இரண்டு நபர்கள் ரயிலில் சந்தித்து பிறகு காதலில் விழுவது பற்றியதாகும். கபூர் ஆதித்ய கஷ்யப் என்ற பெரிதும் வருத்தமுற்ற நம்பிக்கை இழந்த மற்றும் மனம் தளர்ந்த இளம் தொழிலதிபர் வேடத்தில் நடித்திருந்தார். கபூருக்கு அவருடைய நடிப்பை பாராட்டி பல விமர்சனங்களை இந்த படம் பெற்றுத்தந்தது. சிறந்த நடிகர் என்ற பிரிவில் பல விருதுகளுக்கு இவரது பேர் முன்மொழியப்பட்டது. இதில் பிலிம் பேரும் அடங்கும். CNN-IBN ஐ சேர்ந்த ராஜீவ் மசந்த், “இப்படத்தில் இவருடன் கடினமாக முயற்சி செய்து நடித்த கரீனவால் இவர் பாத்திரம் ஓரங்கட்டப்பட்டாலும் ஷாஹித் கபூரின் பண்பட்ட நடிப்பால் ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கி இருந்தார். சுறுசுறுப்பாக காணப்பட்ட கரீனாவின் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
அதன் பிறகு கபூர் ஆசிஸ் மிர்சா இயக்கிய கிஸ்மாத் கனெக்க்ஷன் என்ற படத்தில் வித்யா பாலனுடன் தோன்றினார். வெளியீடுகளின் அடிப்படையில் இது பாக்ஸ் ஆபீசில் ஒரு சுமாரான படமாக அறிவிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு கபூர் காமினி என்ற திகில் படத்தில் இரட்டை பிறவிகளாக சார்லி மற்றும் குட்டு என்ற பாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். விஷால் பரத்வாஜ் இயக்கிய இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் அதிக நேர் விமர்சனங்களை பெற்று தந்தது. கபூரின் செயல்பாடுகள் கூட பாராட்டப்பட்டது CNN-IBN நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் மசந்த், ” ஷாஹித் கபூர் சார்லி மற்றும் குட்டு என்ற சவாலான இரு கதா பாத்திரங்களை உருவாக்கி வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார். மேலும் ஒவ்வொன்றிலும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார் என்று எழுதி உள்ளார். தன்னுடைய குழந்தைதனமான பாத்திரத்தை உடைக்கும் விதமாக தனக்கென எழுதப்பட்ட பாத்திரங்களை சவாலாக ஏற்றுக்கொண்டார். இந்த வருட பிற்பகுதியில் கபூர் அனுராக் சிங்கின் காதல் காமெடி படமான தில் போலே ஹடிப்பாவில் ராணி முகர்ஜியுடன் தோன்றினார்.
2010 இல் கேன் க்ஹோஷின் சான்ஸ் பே டான்ஸ் என்ற திரைப்படத்தில் ஜெனிலியா டி’ சௌசா உடன் நடித்து வருகிறார். இதில் கஷ்டப்படும் பாலிவுட் நடிகர் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு சரியான விமர்சனங்களை கொடுத்தாலும், அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. பின்பு அஹ்மத் கானின் வளர்ந்து வரும் படமான பாதசாலாவில் ஆயிஷா தாகியா மற்றும் நானா படேகருடனும் நடித்தார். அதைத்தொடர்ந்து யாஷ் ராஜ் பிலிம்சின் “பத்மாஷ் கம்பெனி” படத்திலும் நடித்தார். கபூர் சதீஷ் கவ்ஷிக்கின் இயக்கத்தில் நடித்த “மிலேங்கே மிலேங்கே” 2010 , ஜூலை 9 இல் திரைக்கு வந்தது.
சொந்த வாழ்க்கை
கபூர், நடிகரானபங்கஜ் கபூருக்கும் நடிகையும் நாட்டிய நங்கையுமான நீலிமா அசேமுக்கும் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் பிறந்தார். கபூரின் பெற்றோர்கள் அவருக்கு மூன்று வயதாகும் போது பிரிந்தனர். பெற்றோர்களின் பிரிவுக்கு பிறகு தன்னுடைய தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் தன்னுடைய தந்தை மற்றும் சித்தி சுப்ரியா பதக் உடன் நல்லதொரு உறவை கொண்டிருந்தார். இவர் மும்பையிலுள்ள ராஜ்ஹான்ஸ் வித்யாலயாவில் படித்தார். கபூரும் ஒரு சைவ பிரியர் ஆவர். இவருக்கு சனாஹ் என்ற ஒரு சகோதரி உண்டு. ருஹான் என்ற சகோதரன் மற்றும் இஷான் கபூர் என்ற ஒன்று விட்ட சகோதரனும் இவருக்கு உண்டு. வாஹ் என்ற திரைப்படத்தில் இவரோடு சேர்ந்து இஷானும் நடித்துள்ளார்.லைப் ஹோ டு அயசி (2005) அவருடைய தாய் வழி தாத்தா அன்வர் ஆசீம் பீகாரை சேர்ந்த குறிப்பிடத்தகுந்த ஒரு மார்க்சியவாதி பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
பிடா படத்தில் நடித்த போது கபூர்,கரீனா கபூருடன் காதல் கொண்டார். அவர்கள் மூன்று வருடங்களாக காதல் புரிந்தனர். ஜப் வித் மேட் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது பிரிந்தனர். அவரை பொறுத்தவரை அவர்கள் நல்ல உறவுகளில் அறியப்படுகிறார்கள். அவருடைய கூற்றுப்படி , “உலகின் அனைத்து சந்தோஷங்களையும் அவள் (கரீனா ) பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் அவள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன் அவள் ஒரு சிறந்த பெண்.
நடித்த திரைப்படங்கள்
1999 | தால் |
---|---|
2003. | இஷ்க் விஷக் |
2004 | பிதா |
தில் மாங்கே மோர் | |
2005 | தீவானே ஹுயே பாகல் |
வாஹ்! லைப் ஹோ தொஹ் அஸி! | |
ஷிகார் | |
2006 | 36 சீனா டவுன் |
சுப் சுப் கே | |
விவாஹ் | |
2007 | பூல் அண்ட் பினால் |
ஜப் வீ மெட் | |
2008 | கிஸ்மத் கனெக்சன் |
2009 | காமினி |
தில் போலே ஹடிப்பா! | |
2010 | பாத்ஷாலா |
சான்ஸ் பே டான்ஸ் | |
மிலேங்கே மிலேங்கே | |
2011 | மவ்சம் |