சத்ருகன் பிரசாத் சின்கா, பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவர் இருநூற்றுக்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளீல் வெளியான திரைப்படங்களிலும் நடித்தார். இவர் பட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இரு முறை மக்களவையில் உறுப்பினர் ஆனார்.
பதவிகள்
வெளி இணைப்புகள்
நடிகர் சத்ருகன் பிரசாத் சின்கா – விக்கிப்பீடியா
Actor Shatrughan Sinha – Wikipedia