வருண் தவான் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தற்பொழுது மெயின் தேரா ஹீரோ மற்றும் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
வருண் தவான் 24ம் திகதி ஏப்ரல் மாதம் 1987ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை டேவிட் தவான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். இவரின் தாயின் பெயர் கருணா தவான் மற்றும் இவரின் அண்ணன் ரோஹித் தவான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் நாட்டிங்காம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில், இங்கிலாந்துல் வர்த்தக முகாமைத்துவம் பற்றி படித்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
2012ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் இவருடன் இரண்டு காதநாயகர்களில் ஒருவராக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நடிகை அலீயா பட் நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள மெயின் தேரா ஹீரோ என்ற திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியான கன்டிறீகா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இலியானா மற்றும் நர்கிஸ் பக்ரி நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஏக்தா கபூர் தயாரித்து, பாலாஜி மோடியன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏப்ரல் 4ம் திகதி வெளியிடுகின்றது.
இவர் தற்பொழுது ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார். இவருக்கு ஜோடியாக மறுபடியும் நடிகை அலீயா பட் நடிக்கின்றார்.
நடித்த திரைப்படங்கள்
2012 | ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் |
---|---|
2014 | மெயின் தேரா ஹீரோ |
2014 | ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா |
2014 | பட்லபூர் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
2012 | ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் |
---|---|
2013 | ETC பாலிவுட் வர்த்தகம் விருதுகள் |
பிலிம்பேர் விருதுகள் | |
பாலிவுட் ஹங்காமா திரைப்பட விருதுகள் | |
ஸ்கிரீன் அவார்ட்ஸ் | |
லையன்ஸ் கோல்ட் அவார்ட்ஸ் | |
ஜீ சினி விருதுகள் | |
ஸ்டார்டஸ்ட் அவார்ட்ஸ் | |
ஸ்டார் கில்ட் விருதுகள் | |
டைம்ஸ் ஆஃப் இந்தியா |