வித்யூத் ஜம்வால், (ஆங்கிலம்:Vidyut Jammwal, பிறப்பு:டிசம்பர் 10, 1980) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். களரிப்பயிற்று என்ற கலையையும் கற்றவர்.
வாழ்க்கை
2011இல், ஃபோர்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் பில்லா 2, துப்பாக்கி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எதிர்நாயகன் வேடங்களில் நடித்தவர்.
வெளி இணைப்புகள்
நடிகர் வித்யூத் ஜம்வால் – விக்கிப்பீடியா