ரானா தக்குபாடி (ஆங்கில மொழி: Rana Daggubati) (பிறப்பு: 14 டிசம்பர் 1984) இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ராணா 14 டிசம்பர் 1984ஆம் ஆண்டு சென்னை தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டக்குபாதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேசின் அண்ணன் (சுரேஷ் பாபு) மகன் ஆவார். பழம்பெரும் தயாரிப்பாளர் தக்குபாத்தி ராமாநாயுடு இவரின் தாத்தா ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
2010 | லீடர் |
---|---|
2011 | தம் மாரோ தம் |
2011 | நேனு நா ரொஹ்தங் |
2012 | நா இஷ்டம் |
2012 | டிபார்ட்மெண்ட் |
2012 | கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் |
2013 | யே ஜவானி ஹை தீவானி |
2013 | சம்திங் சம்திங் |
2013 | ஆரம்பம் |
2015 | பேபி |
2015 | ருத்ரமாதேவி |
2015 | பாகுபாலி |
2015 | இஞ்சி இடுப்பழகி |
சைஸ் சீரோ | |
2016 | பெங்களூர் நாட்கள் |
2017 | காஸி |
பாகுபலி 2 | |
நானே ராஜூ நானே மந்திரி | |
மடை திறந்து | |
என்னை நோக்கி பாயும் தோட்டா |
வெளி இணைப்புகள்
நடிகர் ரானா தக்குபாடி – விக்கிப்பீடியா