பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ் | Singer P. B. Sreenivas

பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22, 1930 – ஏப்ரல் 14, 2013) தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.


ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. கனஹிபரது என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் சிந்தனை என் செல்வமே” என்ற பாடல், 1953 இல் வெளிவந்த ஜாதகம் படத்தில் இடம்பெற்றது.


ஆங்கிலம், உருது உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். மதுவண்டு என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.


தமிழ்த் திரையிசை உலகில் டி. எம். சௌந்தரராஜன் புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். ‘காலங்களில் அவள் வசந்தம்’ எனும் பாடலைப் பாடி பெரும்புகழை ஈட்டினார். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் இவர் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.


வெளி இணைப்புகள்

பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ் – விக்கிப்பீடியா

Singer P. B. Sreenivas – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *