பாடகர் டி. எம். சௌந்தரராஜன் | Singer T. M. Soundararajan

டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 24, 1922 – மே 25, 2013) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.


வாழ்க்கைச் சுருக்கம்


சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.


சிறப்புகள்


இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.


2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்.


நடிகராக


1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.


செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்


  • மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )

  • வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )

  • மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )

  • ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )

  • ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )

  • மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )

  • யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )

  • சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)

  • உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )

  • நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )

  • இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )

  • நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )

  • நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )

  • முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )↑

  • பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )

  • சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )

  • சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )

  • முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )

  • டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )

  • முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )

  • ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )

  • கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )

  • என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )

  • வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )

  • வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )

  • மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )

  • கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )

  • மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )

  • குயிலாக நான் ( செல்வமகள் )

  • மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )

  • ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )

  • பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )

  • மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )

  • முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )

  • கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )

  • ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )

  • எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )

  • திருடாதே பாப்பா ( திருடாதே )

  • காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )

  • தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )

  • ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )

  • ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )

  • மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )

  • கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )

  • அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )

  • அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )

  • அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )

  • பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )

  • நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )

  • அஹா மெல்ல நட ( புதிய பறவை )

  • அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )

  • யார் அந்த நிலவு ( சாந்தி )

  • சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )

  • பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )

  • என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )

  • உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )

  • சத்தியம் இது ( வேட்டைக்காரன் )

  • சத்தியமே ( நீலமலைத் திருடன் )

  • நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )

  • எங்கே நிம்மதி ( புதிய பறவை )

  • தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )

  • சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )

  • நண்டு ஊறுது ( பைரவி )

  • அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )

  • ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )

  • உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )

  • எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )

  • ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )

  • யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )

  • அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் )

  • மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )

  • ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )

  • உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )

  • அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )

  • அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )

  • ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )

  • முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )

  • மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )

  • நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )

  • மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )

  • கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )

  • அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )

  • நீயும் நானும் ( கெளரவம் )

  • தெய்வமே ( தெய்வ மகன் )

  • யாருக்காக ( வசந்த மாளிகை )

  • நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )

  • பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )

  • வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

  • பெற்ற விருதுகள்


  • பத்மசிறீ

  • கலைமாமணி விருது

  • மறைவு


    இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் சென்னையில் காலமானார்.


    வெளி இணைப்புகள்

    பாடகர் டி. எம். சௌந்தரராஜன் – விக்கிப்பீடியா

    Singer T. M. Soundararajan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *