இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா | Music Director Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர் . தமிழ் நாட்டில் “ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர். ராம் படத்தின் இசைக்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் அவருக்கு “யூத் ஐகான்” என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது.


15 வருட காலத்திற்குள், யுவன் சங்கர் ராஜா 100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான இவர் , 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் துள்ளுவாதோ இளமை (2001) படத்தின் இசை மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார், மேலும் 2000 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2015 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த இசை லேபிளான U1 ரெக்கார்ட்ஸை உருவாக்கி, 2017 ஆம் ஆண்டில், தனது சொந்த திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோ, ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தொடங்கினார்.


யுவன் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்; 2004 ஆம் ஆண்டில், 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஒய்! என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறப்பு விருது விருதினைப் பெற்றார். பிலிம்பேர் விருதுகளுக்காக ஆறு பரிந்துரைகளையும், 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.


ஆரம்ப வாழ்க்கை


இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மற்றும் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. அவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் பின்னணி பாடகர்- இசையமைப்பாளர் பவதாரிணியின் தம்பி. யுவன் ஒருமுறை தனது சகோதரர் கார்த்திக் ராஜா தன்னை விட திறமையானவர் என்று ஒப்புக்கொண்டுள்ளார் . அவரது தந்தையும், உடன்பிறப்புகளும் அவரது இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பட இயக்குனரும் திரைப்பட இசையமைப்பாளருமான கங்கை அமரன் மற்றும் ஆர்.டி.பாஸ்கர் அவரது மாமாக்கள் மேலும் தமிழ் திரையுலகில் பணியாற்றிவரும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் அவருடைய உறவினர்கள்.


யுவன் ஷங்கர் ராஜா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை மற்றுமே பயின்ற யுவன் பின்னர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்த சென்னையில் உள்ள “மியூசி மியூசிகல்” என்ற பியானோ வகுப்புகளில் கலந்துக்கொண்டார். தான் எப்போதும் ஒரு விமானி ஆகவும், உலகம் முழுவதும் பயணிக்க விரும்புவதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறினார், ஆனால் தன்னை சுற்றியுள்ள இசையுடன் வளர்ந்ததால், ​​இறுதியில் இசைக்கலைஞரானார்.


2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுவன் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார். தன்னுடைய முஸ்லிம் பெயர் அப்துல் ஹாலிக் என்பதாகவும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


இசைப்பயணம்


திரைப்பட இசை


1996 ஆம் ஆண்டில், இசையை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளுமாறு அவரது தாயார் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா ஒரு ஆல்பத்திற்கான தாளங்களை இசையமைக்கத் தொடங்கினார். அரவிந்தன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா, யுவனின் சில இசைக்கோர்வைகளைக் கேட்டபின், அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்காக இசையமைக்கச் சொன்னார். அவ்விசையால் ஈர்க்கப்பட்டு, அப்படத்தின் முழு இசையின் பொறுப்பையும் யுவனுக்கு வழங்கினார், பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, யுவன் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; இவ்வாறு யுவனின் இசைப்பயணம் தொடங்கியது. யுவன் அரவிந்தன் படத்திற்கு இசையமைக்கும்போது அவருடைய வயது 16. இன்றளவிலும் அச்சிறுவயதில் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் யுவன். தான் இசையமைக்க வந்தது முற்றிலும் தற்செயலானது என்று குறிப்பிட்டிருந்தார்.


இருப்பினும், அரவிந்தன் படம் மற்றும் இசை மக்களை ஈர்க்கத் தவறிவிட்டன. இதனை தொடர்ந்து யுவனின் இசையில் வெளியான வேளை (1998) மற்றும் கல்யாண கலாட்டா (1998) தோல்வியை சந்தித்தது. அப்படத்திற்கான இசையும் பெருமளவில் ஏற்கப்படவில்லை. விமர்சகர் ஒருவர் பின்னணி இசை குறிப்பிடும் அளவுக்கு இல்லை என்றார்.யுவனின் முதல் சில படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அச்சமயத்தில் தான் இயக்குனர் வசந்த் அவருடைய பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு இசையமைக்க யுவனை அனுகினார், யுவனும் ஒப்புக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இசைக்காக யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடிங்கின. அதன் இசை முற்றிலும் மாறுபட்ட புதுமையான முயற்சி என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியது, ராஜா என்ற பெயருக்கு தகுதியுடையவர் என்று குறிப்பிட்டு இருந்தது. மிகவும் பாராட்டப்பட்ட “இரவா பகலா”, “சுடிதார் அணிந்த்து” போன்ற பாடல்கள் யுவனை குறிப்பாக இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது. சுந்தர் C உடன் சேர்ந்து இரண்டு படங்கள் (உனக்காக எல்லாம் உனக்காக – 1999, ரிஷி – 2000) பணியாற்றிய யுவன் பிறகு அஜித் நடிப்பில் A R முருகதாஸ் இயக்கத்தில் வந்த அதிரடி திரைப்படம் தீணாவில் பணியாற்றினார். தீணா யுவனின் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது, படத்தின் வெற்றியில், யுவனின் இசைக்கு பெரும் பங்கு உண்டு.


2001 ஆம் ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார், ஆனால் அவரது மகனான செல்வராகவன் திரைக்கதை எழுதி, படத்தின் இசைக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். துள்ளுவதோ இளமையின் இசை இளையத்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. இப்படம் செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷின் அறிமுகப்படமாகும். வணிகரீதியாக இப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வெளிவந்த பாலாவின் நந்தா(2001) திரைப்படத்திற்கு யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கின. அதற்கு அடுத்த வருடம் வெளியான ஏப்ரல் மாதத்தில்(2001) படத்தின் இசையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. பிறகு வந்த திரைப்படங்கள் காதல் சாம்ராஜ்யம்-2002 (படம் திரைக்கு வரவில்லை, பாடல்கள் மட்டும் வெளிவந்தது) மௌனம் பேசியதே-2002, புன்னகை பூவே-2002 (யுவனுக்கு படத் திரையில் அறிமுகம்)


இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்


தமிழில்


 • அரவிந்தன் (1997) (அறிமுகம்)

 • வேலை (1998)

 • கல்யாண கலாட்டா (1998)

 • பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

 • தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)

 • உனக்காக எல்லாம் உனக்காக (1999)

 • ரிஷி (2000)

 • தீனா (2000)

 • துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)

 • மனதை திருடி விட்டாய் (2001)

 • நந்தா (2001)

 • ஜூனியர் சீனியர் (2002)

 • காதல் சாம்ராஜ்ஜியம் (2002)

 • ஏப்ரல் மாதத்தில் (2002)

 • பாலா (2002)

 • மௌனம் பேசியதே (2002)

 • புன்னகைப் பூவே (2002)

 • பாப் கார்ன் (2002)

 • வின்னர் (2003)

 • காதல் கொண்டேன் (2003)

 • புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)

 • தென்னவன் (2003)

 • குறும்பு (2003)

 • புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)

 • உள்ளம் (2004)

 • எதிரி (2004)

 • பேரழகன் (2004)

 • 7 ஜி ரெயின்போ காலனி (2004)

 • மன்மதன் (2004)

 • போஸ் (2004)

 • அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)

 • ராம் (2005)

 • அறிந்தும் அறியாமலும் (2005)

 • தாஸ் (2005)

 • ஒரு கல்லூரியின் கதை (2005)

 • கண்ட நாள் முதல் (2005)

 • சண்டக்கோழி (2005)

 • கள்வனின் காதலி (2005)

 • அகரம் (2005)

 • புதுப்பேட்டை (2005)

 • பட்டியல் (2006)

 • அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)

 • கேடி (2006)

 • வல்லவன் (2006)

 • திமிரு (2006)

 • பருத்திவீரன் (2006)

 • தாமிரபரணி (2006)

 • தீபாவளி (2007)

 • சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)

 • சத்தம் போடாதே (2007)

 • தொட்டால் பூ மலரும் (2007)

 • கண்ணாமூச்சி ஏனடா (2007)

 • கற்றது தமிழ் (2007)

 • வேல் (2007)

 • மச்சக்காரன் (2007)

 • பில்லா 2007 (2007)

 • வாழ்த்துகள் (2008)

 • சரோஜா (2008)

 • யாரடி நீ மோகினி (2008)

 • ஏகன் (2008)

 • சிலம்பாட்டம் (2008)

 • குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)

 • சிவா மனசுல சக்தி (2009)

 • சர்வம் (2009)

 • வாமனன் (2009)

 • முத்திரை (2009)

 • யோகி (2009)

 • பையா (2009)

 • தீராத விளையாட்டு பிள்ளை (2009)

 • கோவா (2010)

 • பாணா காத்தாடி (2010)

 • காதல் சொல்ல வந்தேன் (2010)

 • தில்லாலங்கடி (2010)

 • நான் மகான் அல்ல (2010)

 • பாஸ் (எ) பாஸ்கரன் (2010)

 • பதினாறு (2010)

 • வானம் (2011)

 • அவன் இவன் (2011)

 • ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)

 • மங்காத்தா (2011)

 • ராஜபாட்டை (2011)

 • வேட்டை (2012)

 • கழுகு (2012)

 • பில்லா 2 (2012)

 • சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)

 • அமீரின் ஆதிபகவன் (2013)

 • மூன்று பேர் மூன்று காதல் (2013)

 • கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)

 • தில்லு முல்லு (2013) (ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)

 • தங்க மீன்கள் (2013)

 • ஆதலால் காதல் செய்வீர் (2013)

 • பிரியாணி (2013)

 • ஆரம்பம் (2013)

 • வடகறி(ஒரு பாடல்)(2014)

 • வானவராயன் வல்லவராயன்

 • திருடன் போலீஸ்

 • அஞ்சான்

 • பூஜை

 • வை ராஜா வை

 • இடம் பொருள் ஏவல்

 • மாஸ்(2015)

 • யட்சன்

 • தர்மதுரை(2016)

 • சென்னை600028-2

 • யாக்கை

 • நெஞ்ஞம் மறப்பதில்லை

 • தரமணி

 • சத்ரியன்(2017)

 • கடம்பன்

 • அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

 • சந்தனதேவன்(1 Song out)

 • செம்ம போதை ஆகாது

 • பலூன்

 • இரும்புதிரை(2018)

 • ராஜா ரங்குஸ்கி

 • பேய்பசி

 • பேரன்பு

 • பியார் பிரேமா காதல்

 • ஓம்(1Song)

 • ஜுனீயஸ்

 • சண்டகோழி-2

 • மாரி-2

 • கண்ணே கலைமானே(2019)

 • கழுகு-2

 • சூப்பர் டீலக்ஸ்

 • NGK

 • சிந்துபாத்

 • நேர்கொண்டபார்வை

 • ஹுரோ

 • == இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்


 • சந்தனதேவன்

 • மன்னவன் வந்தானடி

 • மாமனிதன்

 • எரியும் கண்ணாடி

 • குருதியாட்டம்

 • களத்தில் சந்திப்போம்

 • டிக்லோனா

 • கசடதபர

 • ஆலிஸ்

 • மாநாடு

 • வலிமை

 • சக்ரா

 • YuvanBadri3

 • விருதுகள்


 • சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)

 • சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது – 7 ஜி ரெயின்போ காலனி (2004)

 • விருப்பமான பாடலுக்கான விஜய் விருது – “என் காதல் சொல்ல” – பையா (2010)

 • வெளி இணைப்புகள்

  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா – விக்கிப்பீடியா

  Music Director Yuvan Shankar Raja – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *