பாடகி அனிதா கார்த்திகேயன் | Singer Anitha Karthikeyan

அனிதா கார்த்திகேயன் (Anitha Karthikeyan) ஒரு பின்னணிப் பாடகர் ஆவார். இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவரான திரு. கே. வெங்கடநரசிம்மன் மற்றும் டாக்டர் (திருமதி.) வி. மதுரம் ஆகியோருக்கு மகளாக 13, திசம்பரில் பிறந்தவர். அனிதா, சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், எம்.ஒ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். படித்துக்கொண்டிருக்கும் போதே, அவர் பாரம்பரிய இசையிலும், அகஸ்டின் பால் வழிகாட்டலின் கீழ் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் 8 வது நிலை வரை பயிற்சி பெற்றார். மற்றும் இந்துஸ்தானி இசையை திருமதி. மேக்னா தாண்டேகர் என்பவரிடமிருந்து கற்றுக்கொண்டார்.


தொழில்


இசை அமைப்பாளரான டி. இம்மான் 2007 ஆம் ஆண்டில் மருதமலை என்ற படத்தில் பின்னணிப் பாடகராக அனிதாவை அறிமுகப்படுத்தினார். இம்மானுடைய இசை அமைப்புகளில் பல வகைகளை ஆராய்வதற்கான வாய்ப்பு அனிதாவிற்கு கிடைத்தது. ஐந்தாம் படை திரைப்படத்தில் வரும் பாடலான ‘ஷோக்கு சுந்தரி’ என்ற பாடலின் மூலமாக இசை வட்டத்தில் அனிதாவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அவரது பாடல் ‘வாடா வாடா பையா’ ஒரு பெரிய வெற்றி பெற்றது. ‘வாகை சூட வா’ என்ற படத்திற்காக ‘செங்க சூளகாரா’ எனத் தொடங்கும் மற்றொரு பாடல் குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேசிய விருது பெற்ற படத்தில் இவரது பாடல் நல்ல பெயரை தேடித் தந்தது. இளையராஜாவின் இசையில் பாடிய பிறகு, இவருக்கு தனிப்பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் வெளிவந்த ஸ்ரீ ராமராஜ்ஜியத்தில் பாரம்பரிய இசை சார்ந்த பாடல்களைப் பாடியுள்ளார். மேலும்,காயம் 2 (தெலுங்கு) படத்திற்காக “மாசக்கணக்கா” எனத் தொடங்கும் பாடல், செங்காத்து பூமியிலே (தமிழ்) படத்திற்காக, “சிக்கிக்கிச்சு ஓரம்போ” எனும் பாடல் மற்றும் சூர்யகாந்தி(கன்னடம்) படத்திற்காக, “சொல்ப சவுண்டு” எனும் பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியுள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், இந்தி மற்றும் மலாய் மொழிகளில் பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இம்மான், தேவி ஸ்ரீ பிரசாத், ஜி.வி.பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, கோபால் ராவ் மற்றும் பலர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார். மெல்லிசை, மேற்கத்திய, நாட்டுப்புற மற்றும் கிளாசிக்கல் உட்பட அனைத்து வகைகளிலும் இவர் பாடியுள்ளார்.


தனி நிகழ்ச்சிகள் மற்றும் உலக சுற்றுலா நிகழ்ச்சிகள்


அனிதா தனது சிறு வயதிலேயே மேடை நிகழ்ச்சிகள் செய்துள்ளார். இவர், கே. ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ். சித்ரா, பி. சுசீலா, ஜெயச்சந்திரன் மற்றும் மனோ, அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன், ஸ்ரீனிவாஸ், எஸ்.என் சுரேந்தர், கார்த்திக், திப்பு போன்ற தொழில்முறை பாடகர்களுடனும், மற்றும் இளைய தலைமுறையினருடனும் 1000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இன்று வரை பங்கேற்றுள்ளார்.


அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்காற்றியுள்ளார்.

வெளி இணைப்புகள்

பாடகி அனிதா கார்த்திகேயன் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *