பாடகி சின்மயி | Singer Chinmayi

சின்மயி ஸ்ரீபதா (தெலுங்கு: చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.


சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ‘ஆஹா காப்பி க்ளப்’ எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார். இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,


ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.


சர்ச்சை


சின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக தளங்களில் இயங்குபவர். கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் தர வேண்டும் எனவும் அதை பெற்றுத்தர உதவும்படியும் மற்றொரு புகாரில் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களும், தன்னைப்பற்றி கீழ்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர் உபயோகப்படுத்தும் நபர்களை கைது செயதனர். ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறியுள்ளார். சின்மயி இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து சொன்னதால் தான் அவருக்கு எதிர் வினை கடுமையாக இருந்தது எனவும் பலரால் கூறப்படுகிறது.. மீனவர்கள் மீன்களைக்கொல்வது பாவமாயில்லையா என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது. இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற இதழில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தது. அது பிடிக்காததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.


திருமணம்


இவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

சின்மயி பாடிய பாடல்கள்

2002 ஒரு தெய்வம் தந்த பூவே
ஒரு தடவை சொல்வாயா
கிறுக்கா கிறுக்கா
உயிர் பிரிந்தாலும்
இதயமே
பூந்தேனா
2003 மைனாவே மைனாவே
பூ பூ பூங்குருவி
என்ன இது
பிளீஸ் சார்
கண்ணா
பிரிவெல்லாம் பிரிவல்ல
பூவே முதல் பூவே
சந்திப்போமா
ஒரு நண்பன் இருந்தால்
என் உயிர் தோழியே
2004 புது காதல் காலமிது
என்னை தீண்டிவிட்டாய்
நீ தானே என் மேல
இஃப் யு வோன கம் அலோங்க்
ஒப்பனக்கார வீதியிலே
எங்கு பிறந்தது
காதலிக்கும் ஆசையில்லை
2005 நூதனா
சில் சில்
2006 காதல் நெருப்பின்
2007 சஹானா
ஆருயிரே,மைய்யா
2008 ஆவாரம் பூ
சின்னம்மா,ஐ மிஸ் யூ டா
2009 லேசா பறக்குது
நிலா நீ வானம்
வாராயோ வாராயோ
2010 பூவே பூவே
கிளிமஞ்சாரோ
அன்பில் அவன்
2014 இதயம்
2015 என்னோடு நீ இருந்தால்
ரோஜா கடலே
இதயத்தை ஏதோ ஒன்று
நான் அவள் இல்லை
2016

2021

சைரட் ஜலோ ஜி
Neevevvaro Boyfriend For Hire

பின்னணி குரல் கொடுத்த படங்கள்

2006 சில்லுனு ஒரு காதல்
2007 உன்னாலே உன்னாலே
சத்தம் போடாதே
2008 ஜெயம் கொண்டான்
தாம் தூம்
சக்கரகட்டி
வாரணம் ஆயிரம்
2009 தநா-07 ஏஎள் 4777
யாவரும் நலம்
மோதி விளையாடு
கண்டேன் காதலை
2010 அசல்
ராக்தா சரித்ரா
தீராத விளையாட்டுப் பிள்ளை
விண்ணைத்தாண்டி வருவாயா
ஏ மாயா சேசவா
சுறா
மன்மத பாணம் – (தெலுங்கு)
2011 கோ
நடுநிசி நாய்கள்
வந்தான் வென்றான்
2012 வேட்டை
மாற்றான்
2014 லிங்கா

வெளி இணைப்புகள்

பாடகி சின்மயி – விக்கிப்பீடியா

Singer Chinmayi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *