பாடகி சின்னப்பொண்ணு | Singer Chinnaponnu

சின்னபொண்ணு (Chinnaponnu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர்.


தனது பதின்மூன்றாம் வயது முதலே கோயில்களிலும் தேவாலயங்களிலும் பாடத்துவங்கிய இவர் பின்னர் கோட்டைச்சாமி குழுவினருடன் இணைந்து பாடத்துவங்கினார். நாட்டுப்புற ஆய்வியலாளர் கே.ஏ. குணசேகரனின் உதவி தமிழ்நாட்டு மேடைகள் பலவற்றிலும் சின்னப்பொண்ணுவின் பாடலை ஒலிக்கச் செய்தது.


2004 ஆம் ஆண்டில் இரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இவர் பாடிய வாழ்த்துறேன் வாழ்த்துறேன் எனும் பாடல் இவர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த நிகழ்வாகும். 2008 ஆம் ஆண்டில் காதலில் விழுந்தேன் படத்தில் இவர் பாடிய நாக்கு முக்கா பாடல் மிகவும் புகழ்பெற்றது.


2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் எம் டிவி கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சியில் கைலேஷ் கெர் உடன் இணைந்து பாடல்களைப் பாடினார்.


வெளி இணைப்புகள்

பாடகி சின்னப்பொண்ணு – விக்கிப்பீடியா

Singer Chinnaponnu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *