பாடகர் தீபன் சக்ரவர்த்தி | Singer Deepan Chakravarthy

தீபன் சக்ரவர்த்தி இந்திய திரைப்படப் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகரான இசைத் தென்றல் திருச்சி லோகநாதனின் மகனாவார்.


இசைப்பயணம்


தீபன் சக்ரவர்த்தி தன் இசைப்பயணத்தை 1974 ஆம் ஆண்டு தொடங்கினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி புகழ்பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடுவதற்காக இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பாவினால் அறிமுகம் செய்யப்பட்டார். அதே வருடம் பொதிகை தொலைக்காட்சியிலும் தஞ்சை வாணன் அறிமுகம் செய்தார். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் சென்று பாடி வந்தார்.


நடிப்பு


இவர், 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரமும் ஈரமும் என்னும் தமிழ் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.


பாடிய சில தமிழ் பாடல்கள்

நிழல்கள் பூங்கதவே தாழ்திறவாய்
௭ங்க ஊரு காவல்காரன் அரும்பாகி மொட்டாகி

வெளி இணைப்புகள்

பாடகர் தீபன் சக்ரவர்த்தி – விக்கிப்பீடியா

Singer Deepan Chakravarthy – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *