பாடகர் திலிப் வர்மன் | Singer Dhilip Varman

திலிப் வர்மன் ஓரு மலேசியப் பாடகர். இவர் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தியப் பின்னணிப் பாடகர்களுடன் ஒப்பிடப்படும் மலேசியத் தமிழ்ப் பாடகரான இவர், தமிழ் இசையமப்பாளர்களான இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் ரசிகராவார். தனது இசைப் பயணத்தை சிறு மேடை நிகழ்ச்சிகளின் வாயிலாகத் தொடங்கிய திலிப் வர்மனின் பாடல்களில் கனவெல்லாம் நீதானே என்ற பாடல் மிகப் புகழ் பெற்றதாகும்.


மலேசியத் தமிழ்த் திரைப்படங்களான நவம்பர் 24, கண்கள், இவன்தான் ஹீரோ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்திய இசைத் துறை வழங்கிய சிறந்த ஆண் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ சிறீ சாமிவேலுவும் இவரது ”கனவுகள் வரும்” பாடல்தொகுப்பிற்கு ஓர் பாடல் எழுதியுள்ளார்.


2002 ஆம் ஆண்டில்தான் இவரது திறமை அங்கீகரிக்கப்பட்டது எனலாம். ”நவீனம்” என்னும் பாடல்தொகுப்பில் பாடும் வாய்ப்பைப் பெற்றர்.


திலிப் தனது ”உயிரைத் தொட்டேன்” என்னும் பாடலின் மூலம் மேலும் புகழ் பெற்றார். இந்த பாடலின் சிறந்த இசையின் காரணமாகவும், தரத்தினாலும் ”டி.ஹெச்.ஆர் ராகா மலேசியன் டாப் 10” என்ற நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக ஒலிபரப்பப்பட்டது.


மாபெரும் வெற்றிபெற்ற ”கனவெல்லாம்” என்னும் இசைக்கோவைக்குப் பிறகு ”மீண்டும் மீண்டும்” என்னும் இசைக்கோவையைத் துவங்கினார். இந்த இசைக்கோவையை இந்தியப் பாடகருடன் இந்தியாவில் பாடியுள்ளார்.


வெளி இணைப்புகள்

பாடகர் திலிப் வர்மன் – விக்கிப்பீடியா

Singer Dhilip Varman – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *