பாடகி கே. ஜமுனா ராணி | Singer Jamuna Rani

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.


வாழ்கை


ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.


பாடிய சில பாடல்கள்


 • காளை வயசு, இவர்கானா, தாரா தாரா வந்தாரா (தெய்வப்பிறவி)

 • செந்தமிழ் தேன்மொழியால் (மாலையிட்ட மங்கை)

 • பாட்டொன்று (பாசமலர்)

 • காட்டில் மரம், பெண் பார்க்கும் மாப்பிள்ளை (கவலை இல்லாத மனிதன்)

 • ஆசையும் என் நேசமும் (குலேபகாவலி)

 • சித்திரத்தில் பெண் (ராணி சம்யுக்தா)

 • சின்ன சின்ன கட்டு (சிவகங்கை சீமை)

 • என் கண்ணைக் கொஞ்சம் (கைதி கண்ணாயிரம்)

 • காலம் சிறிது (தை பிறந்தால் வழி பிறக்கும்)

 • வாழ்க வாழ்க (ஆளுக்கொரு வீடு)

 • காதல் என்றால் என்ன, மேலே பறக்கும் ராக்கெட்டு (அன்பு எங்கே)

 • வருவாளோ இல்லையோ (பாசமும் நேசமும் 1964)

 • காவேரி தாயே (மன்னாதி மன்னன் 1960)

 • நெஞ்சில் நிறைந்த (நகரத்தில் சிம்பு 1961)

 • காமுகர் நெஞ்சம் (மகாதேவி 1957)

 • உங்க மனசு ஒரு தினுசு (மகளே உன் மனசு)

 • எந்த நாளும் சந்தோஷமே (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

 • பெற்ற விருதுகளும், சிறப்புகளும்


 • கலைமாமணி விருது

 • வெளி இணைப்புகள்

  பாடகி கே. ஜமுனா ராணி – விக்கிப்பீடியா

  Singer Jamuna Rani – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *