கிடாக்குழி மாரியம்மாள், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிடாக்குழி எனும் கிராமத்தைச் சேர்நத நாட்டுப்புற பாடகர் ஆவார். இவர் சிறுவயது முதல் கோயில் திருவிழாக்கள், சடங்குகள் மற்றும் இறப்பு வீடுகளில் நாட்டுப்புற பாடல்களை பாடுபவர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் 9 ஏப்ரல் 2021ல் திரையரங்குகளில் வெளியாக உள்ள கர்ணன் எனும் திரைப்படத்திற்கு கண்டா வரச்சொல்லுங்க எனும் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடலை, கிடாக்குழி மாரியம்மாள் பாடியுள்ளார்.
வெளி இணைப்புகள்
பாடகி கிடாக்குழி மாரியம்மாள் – விக்கிப்பீடியா