கொல்லங்குடி கருப்பாயி, ஒரு தமிழ்ப் பாடகராவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார்.
திரைத்துறை
நடிப்பு
பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார்.
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1985 | ஆண்பாவம் |
1987 | ஆயுசு நூறு |
1996 | கோபாலா கோபாலா |
பாடகராக
ஆண்டு | பாடல் | திரைப்படம் |
---|---|---|
1985 | பேராண்டி | ஆண்பாவம் |
1985 | ஒட்டி வந்த | ஆண்பாவம் |
1985 | கூத்து பாக்க | ஆண்பாவம் |
1985 | சாயா சீலை | ஆண்பாவம் |
1985 | அரசப்பட்டி | ஆண்பாவம் |
1997 | கானாங்குருவி கூட்டுக்குள்ளே | ஆகா என்ன பொருத்தம் |
வெளி இணைப்புகள்
பாடகி கொல்லங்குடி கருப்பாயி – விக்கிப்பீடியா