லக்சிமி சிவனேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam, பிறப்பு: செப்டம்பர் 26, 1990) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். பல்வேறு வகையிலான பாடல்களை யூடியூப், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் ஊடாகப் பகிர்ந்து வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் தொராண்டோவில் வசித்து வருகிறார். இலக்சிமி தனது மூன்றாவது அகவையில் இசை கற்றுக் கொண்டார்.
கனடாவின் பல மேடைகளில் இவர் பாடி வரும் இவர் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இலக்சிமி தொறாண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கத்தைய செவ்வியலிசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது முதுகலைக் கல்வியை தொடர்கின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் படித்து கருநாடக இசையில் பட்டம் பெற்றார். ஐபிசி தமிழ் வானொலி நடத்திய இன்னிசைக் குரல் நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றார்.
சிறப்புகள்
வெளி இணைப்புகள்
பாடகி லக்சிமி சிவனேஸ்வரலிங்கம் – விக்கிப்பீடியா
Singer Luksimi Sivaneswaralingam – Wikipedia