பாடகி எம். எம். மானசி | Singer M. M. Manasi

எம். எம். மானசி என்பவர் ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடியுள்ளார். இவர் டி. ஜி வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை நிர்வாகத்தை (MBA) பயின்றார். இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை சில: தமிழச்சி (ஆரம்பம்), கட்டிகிட (காக்கி சட்டை), ரோபோ ரோமியோ (தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்), ஆட்டக்கார மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை – இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படமாகும்).


வாழ்க்கை வரலாறு


மானசி ஜனவரி 8,1993 அன்று சென்னையில் தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்து மும்பையில் வளர்ந்தார். தனது 2 ஆம் வயதில் இசையைக் கற்று பொது இசை நிகழ்ச்சியில் நவராத்திரி மற்றும் கணபதி பூஜையில் பஜனைகளைப் பாடியவர். இவருக்கு எம். எம். மோனிஷா என்கிற தங்கையும் உள்ளார். இவரும் பிண்ணணி பாடகியாவார்.


இவரை இசைஞானி இளையராஜாதான் முதன் முதலில் கன்னட இசைத்துறையில் திரிஷ்யம் என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்தவர். இசையமைப்பாளர் வித்யாசாகர் மலையாளத்தில் ஒரு இந்திய பிரயாணக்கதா என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்துள்ளார். இவர் முதன் முதலாக பாலிவுடில் பாக் ஜானி என்கிற திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் டாடி மம்மி பாடடியவர். இப்பாட்டை 20 கோடி பேர் யூடியூபில் கண்டுள்ளார்கள்.


இவர் பாடகி மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பிண்ணணிக் குரலும் கொடுப்பவராகவும் உள்ளார். நடிகை தமன்னா, சமந்தா, பிந்து மாதவி, திரிஷா, சுவாதி, ஹன்சிகா மோத்வானி, லஷ்மி மேனன் ஆகியோர்க்கு பிண்ணணி குரல் கொடுத்துள்ளார்.


திரைப்பட வரலாறு


பிண்ணணி பாடகியாக

2013 அன்னக்கொடி
நேநோக்கடினே
தடக்கா
பலுப்பு
ஆரம்பம்
வாலு
தடக்கா
2014 லெஜென்ட்
பவர்
அஞ்சான்
ஆஹா கல்யாணம்
ஆகாடு
கோவிந்துடு அந்தாரிவதெலே
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
2015 பாக் ஜானி
காக்கி சட்டை
புலி
அக்ஹில்
சன் ஆஃப் சத்யமூர்த்தி
ஷிவம்
சகலகலா வல்லவம்
குமரி 21எஃப்
மாசு எங்கிர மாசிலாமணி
ராக்‌ஷசுடு
யாகாவாராயினும் நா காக்க
2016 சர்தார் கப்பர் சிங்
தாரை தப்பட்டை
சார்ரைனோடு
2017 வேலையில்லா பட்டதாரி 2
விவேகம்
மஹானுபவுடு
வுன்னதி ஒக்கடெ ஜிந்தகி
2018 ரியா
ரங்கஸ்தலம்
சாமி 2
படி படி லெச்சே மனசு
னெக்ஸ்ட் என்டி?
மாரி 2
2019
எஃப் – ஃபன் அன்ட் ஃப்ரஸ்ட்ரேஷன்

பிண்ணணி குரலாக

2013 நிர்ண்யம்
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா
2014 வடகறி
அஞ்சான்
மேகமன்
திருமணம் என்னும் நிக்காஹ்
2015 டார்லிங்
பாகுபலி : தி பிகினிங்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
மாரி
நவ மன்மதுடு
உப்பு கருவாடு
2016 மிருதன்
தேவி
கொடி
இறைவி
ஜாக்சன் துறை
தோழா
தர்மதுரை
2018 நடிகையர் திலகம்

வெளி இணைப்புகள்

பாடகி எம். எம். மானசி – விக்கிப்பீடியா

Singer M. M. Manasi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *