என். எல். கானசரஸ்வதி ஒரு இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1950 களிலும், 1960 களின் முற்பகுதியிலும் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். அநேகமாக தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள இவர் ஏனைய தென்னிந்திய மொழிப் படங்கள் சிலவற்றிலும் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. அவை திரைப்படங்களில் நடனக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
1951 | தேவகி | இல்லறம் காப்பதுவே |
1952 | அமரகவி | எல்லாம் இன்பமே |
முல்லைச் சிரிப்பிலே | ||
மூக்குத்தி மின்னுது | ||
1952 | குமாரி | நாட்டுக்கு நலம் நாடுவோம் |
1952 | மூன்று பிள்ளைகள் | உன்னருள் மறவேன் ஐயா |
1952 | தாய் உள்ளம் | பூ செண்டு நீ |
1953 | அன்பு | வெந்தழலாய் எரிக்கும் வெண்மதியே |
1953 | மதன மோகினி | ஆதி முதலானவர் |
1953 | நால்வர் | அருள் தாரும் எமதன்னையே |
1953 | உலகம் | காதலினால் உலகமே இன்பமதே |
கலையே உயிர் துணையே | ||
1954 | நல்லகாலம் | கண்ணாலே காண்பதும் |
1954 | பொன் வயல் | நம்ம கல்யாணம் ரொம்ப நல்ல கல்யாணம் |
1954 | புதுயுகம் | ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க |
1955 | கள்வனின் காதலி | தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற |
1955 | நல்ல தங்காள் | எவளே அவளே |
1955 | நம் குழந்தை | பாலைவனமீதிலே ஜீவநதி போலவே |
1955 | நீதிபதி | ஆனந்தமே ஆனந்தம் |
1956 | கண்ணின் மணிகள் | மகேஸ்வரி உந்தன் |
வினையோ நின் சோதனையோ | ||
நாயகர் பட்சமடி | ||
1956 | நானே ராஜா | ஆடற்கலைக்கழகு சேரப் பிறந்தவள் |
1956 | ஒன்றே குலம் | மாங்கிளை மேலே பூங்குயில் கூவியது |
1956 | படித்த பெண் | இருள் சூழ்ந்த உலகினிலே |
வாழ்வினிலே காணேனே இன்பம் | ||
1956 | ராஜா ராணி | ஆனந்த நிலை பெறுவோம் |
1956 | ரம்பையின் காதல் | கலைஞானம் உறவாடும் நாடு |
1957 | அம்பிகாபதி | கண்ட கனவு இன்று பலித்ததே |
1957 | சமய சஞ்சீவி | ஆனந்தம் தருவது சங்கீதமே |
1959 | மணிமேகலை | பழங்கால தமிழரின் வாழ்க்கை நிலை |
அவனியில் புது அறநெறியே | ||
1958 | நாடோடி மன்னன் | வருக வருக வேந்தே |
1959 | தலை கொடுத்தான் தம்பி | தலை கொடுத்தான் தம்பி |
பன்னீரில் தலை முழுகி | ||
“அனைவரும் கருத்துடன் | ||
1960 | நான் கண்ட சொர்க்கம் | இளமை மாறாத இன்பம் |
1961 | மல்லியம் மங்களம் | சிங்கார வேலா விளையாட வா |
வெளி இணைப்புகள்
பாடகி என். எல். கானசரஸ்வதி – விக்கிப்பீடியா
Singer N. L. Ganasaraswathi – Wikipedia