பாடகர் ராகுல் நம்பியார் | Singer Rahul Nambiar

ராகுல் நம்பியார் (Rahul Nambiar) ஒரு இந்திய பின்னணி பாடகர் மற்றும் இசை நிகழ்த்து கலை நிகழ்ச்சியாளர் ஆவார். முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர், அவர் 2001 இல் சப்தஸ்வரங்கல் நிகழ்ச்சியை வென்றார் மற்றும் நேரடி பாடல்களை பாடத் தொடங்கினார். பின்னர் அவர் பின்னணி பாடகரானார் , பல்வேறு மொழிகளில் பல முன்னணி தென்னிந்தியத் திரைப்பட இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார் மேலும் பாஸ் பிளேயர் ஆலாப் ராஜூவுடன் இணைந்து ராஹ்லாப் என்ற ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார் .


தொழில்


ராகுல் கேரளாவின் கண்ணூரைச், சேர்ந்தவர், டெல்லி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்தார் அவரது முதுகலை வணிக மேலாண்மை மற்றும் T. Krithika Reddy (9 June 2011). “Life & Style / Money & Careers : The Sing Thing”. The Hindu. பார்த்த நாள் 20 October 2011. பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் முடித்தபின், ராகுல் ஒரு வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றத் தொடங்கினார், வங்கிப் பணியானது சுனிதா சாரதி உடனான ஒரு நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன், “சலிப்பான பணி” என அவர் உணர்ந்தார். 2001ஆம் ஆண்டில் அவர் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கல் போட்டியில் 3000 போட்டியாளர்களை வென்றார், தொடர்ந்து அவர் ஒரு பாடகராக தனது தொழிலை தொடர முடிவு செய்தார் தமிழ் படமான டிஷ்யூம் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பின்னணி பாடகராக ராகுல் அறிமுகப்படுத்தப்பட்டா


2009 ஆம் ஆண்டில் ராகுல் தனது நீண்டகால நண்பர் மற்றும் பாஸ் இசைக்கருவி வாசிக்கும் ஆலாப் ராஜுவுடன் சேர்ந்து ராஹ்லாப் என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். இந்த இருவரும் அவர்கள் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து இந்தி மொழியை அடிப்படையாக கொண்ட மியூசிக் பியான்ட் ஜெனரஸ் என்ற ஒரு சுய-பெயரிடப்பட்ட இசைத்தொகுப்பை வெளியிட்டனர், மேற்கத்திய, கர்னாடக, லைட் மியூசிக் மற்றும் ஹிப்-ஹாப் போன்ற பல்வேறு வகைகளில் பாடியுள்ளார். ராகுல் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 400 க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார், மற்றும் திரைப்படங்களில் 350 க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். மிக முக்கியமானவர்கள் மணிசர்மாவின் “வசந்த முல்லை” (போக்கிரி), யுவன் ஷங்கர் ராஜாவின் “அடடா மழடா” (பையா) போன்ற பாடல்கலுக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரையை பெற்றது. 2012 இல், அதிரடி வேட்டை திரப்படத்தில் தமன் இசையில் “குருவரம்” என்ற பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது பிரிவில் தனது முதல் ஃபிலிம்பேர் விருது பெற்றார். மேலும் அவர் பல விளம்பரங்களுக்கு குரல் அளித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

பாடகர் ராகுல் நம்பியார் – விக்கிப்பீடியா

Singer Rahul Nambiar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *