பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் | Singer Rajesh Krishnan

ராஜேஷ் கிருஷ்ணன், (Rajesh Krishnan) ஜூன் 3, 1974 இல் பிறந்த ஒரு இந்திய மெல்லிசை பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களில் அவரது பாடல்கள் பிரபலமாக உள்ளது. அவர் கன்னடத் திரையுலகில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை, 1100 படங்களுக்கு மேலாகப் பாடியுள்ளார். மற்றும் 500 தெலுங்குப் பாடல்களை ஆந்திரத் திரைப்படத்துறையிலும் மற்றும் 500 பாடல்களை தமிழ் , மற்றும் இந்தி திரைப்படங்களுக்காகப் பாடியுள்ளார். மற்றும் 17 பிராந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். இவர், கௌரி கணேசா (1991) படத்தில் அறிமுகமானார். இவர், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பல பக்தி பாடல்கள் அடங்கிய இசை தொகுப்புகள், கருப்பொருள் சார்ந்த இசைத்தொகுப்புகள், மற்றும் வணிக விளம்பரங்களுக்கு அவர் பாடியுள்ளார்.


ஆரம்ப வாழ்க்கை


ராஜேஷ் கிருஷ்ணனின் முழுப்பெயர் ராஜேஸ்வரா சாய் சுப்ரமண்யா நாகராஜ கிருஷ்ணன் என்பதாகும். இவர், பெங்களூரில் பிறந்தார். இவரது தாயார் மீரா கிருஷ்ணன் இவரது முதல் குருவாக இருந்தார். ராஜேஷ் கிருஷ்ணன் ஹம்சேலேகாவின் வழிகாட்டுதலில் பாடகராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். 13 வயதில், ராஜேஷ் செயின்ட் ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளியை குறிக்கும் குழந்தைகள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.


தொழில்


கன்னடத்தில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்கள், தெலுங்கில் 500 பாடல்கள், தமிழ் மற்றும் இந்தி மொழியில் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 17 மொழிகளில் பக்தி இசை தொகுப்புகள், கருப்பொருள் இசைத் தொகுப்புகள் மற்றும் விளம்பரங்களுக்காகவும் பாடியுள்ளார். அவர் பல கன்னட படங்களுக்கும் அமிர்ததரே, “நூறு ஜன்மகு மற்றும் “திரு & திருமதி ராமாச்சரி ஆகிய திரைப்படங்களுக்கு குரல்-ஒலிச்சேர்க்கை செய்துள்ளார்.


தொலைக்காட்சி, மாடலிங், வானொலி மற்றும் நடிப்பு


மாருதி சுஜூகி, வாகொனார் தொலைக்காட்சி, மஞ்சால் சோப்பு, இந்துலேகா முடி எண்ணெய் போன்ற நிறுவன விளம்பரங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பொருள்களுக்காகவும் ராஜேஷ், விளம்பர மாதிரியாயிருந்தார்.


ராஜேஷ், ஜீ கன்னட டி.வி தொலைக்காட்சியில் பல பாடல்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு (குறிப்பாக ச ரி க ம ப – இசை நிகழ்ச்சி) நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏசியாநெட் சுவர்ணா, மியூசிக் நா சூப்பர்ஸ்டார் மற்றும் வாய்ஸ் ஆப் பெங்களூரு – டி.வி. 9 ஆகிய தொலைக்காட்சிகளில் நீதிபதியாக பங்கேற்றுள்ளார்.


வெளி இணைப்புகள்

பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் – விக்கிப்பீடியா

Singer Rajesh Krishnan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *