பாடகி ரீடா தியாகராஜன் | Singer Rita Thyagarajan

ரீடா தியாகராஜன் ( Ritha Thiyagarajan) என்கிற சுசரித்ரா தியாகராஜன் 1984, ஜூன் 10 அன்று பிறந்த ஒரு இந்திய பின்னணிப் பாடகர் ஆவார்.”ரீடா” எனவும் அறியப்படும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பாடியுள்ளார்.


ஆரம்ப வாழ்க்கை


ரீடா தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் அவர் தனது ஐந்து வயதில் பாரம்பரிய கர்நாடக இசையினைப் பயின்றார். அவரது தாயார் லலிதா தியாகராஜன் சென்னையில் ஒரு மூத்த விரிவுரையாளரும் கலைஞரும் ஆவார். அவரது தந்தை பிரபலமான இந்திய நாளேட்டில் பணிபுரிந்து வருகிறார். ரீடாஇந்துஸ்தானி இசையைக் கற்கத் தொடங்கினார். சென்னையில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். அவரது சகோதரி பாரம்பரிய கர்நாடக இசை பயிற்சியாளர் மற்றும் வடிவமைப்பு ஆலோசனை வர்த்தக நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.


சென்னை, மைலாப்பூரில் உள்ள பி.எஸ் சீனியர் உயர் நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற ரீடா, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் வடிவமைப்பில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, தன் தாயையும் சகோதரியையும் பின்பற்றிச் சென்றார். கல்லூரியில் இருந்த அவர் மற்ற இசைபாணிகளின் மேல் நாட்டம் கொண்டு அதைக் கண்டறிந்து, வணிக ரீதியிலும், மேற்கத்திய பாணியிலும் அதை பரிசோதித்தார். இவர் ஒரு கணிணி வரைகலைஞர் மற்றும் விஷுலைசர் மற்றும் உத்தோபிக் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தனிப்பட்ட நிபுணர்களின் வடிவமைப்பு அரங்கத்தின் இணை நிறுவனர் ஆவார்.


ஆரம்ப கால வாழ்க்கையில்


ரீடா இசையமைப்பாளர் டி. இம்மானுடன் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். கல்லூரிக்குப் பிறகு ரீடா பதிவு செய்த இசையை கேட்டு அவரிடம் இமான் தொடர்பு கொண்டார். “ஆணை” திரைப்படத்தில் இடம் பெற்ற ”எந்தன் வருங்கால வீட்டுக்காரனே” என்ற முதல் பாடலுக்குப் பின்னர் தென்னிந்திய மொழிகளில் 300 பாடல்கள் மற்றும் விளம்பரங்களுக்கும் பாடியுள்ளார். . வில்லு படத்தில் “வாடா மாப்பிள்ள” என்ற பாடல் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்தது. பின்னர் “கந்தசாமி” படத்திற்காக “அலெக்ரா” மற்றும் “மாம்போ மாமியா” என்ற பாடல்களை பாடினார். அவர் “அலெக்ரா” பாடலுக்காக பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார். அவரது பாடலான “வாடா மாப்பிள்ள” ரேடியோ மிர்ச்சி இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த பாடலை வென்றது. பின்னர் மணிசர்மா இசையில் அதிதி படத்தில் “கில்லாடிகோனா”, கீரவாணி இசையில் பஞ்சதாரா பொம்மா பொம்மா போன்ற பாடல்களுக்காக மீண்டும் ரேடியோ மிர்ச்சி ஆண்டின் சிறந்த பாடல் விருது அளிக்கப்பட்டது.


ரீடா, இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, மணி ஷர்மா, டி. இம்மான், வித்யாசாகர், தேவி ஸ்ரீ பிரசாத், எம்.ஜெயச்சந்திரன் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தார். சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேடை நிகழ்ச்சிகளிலும் அவர் பாடிவருகிறார்.


வெளி இணைப்புகள்

பாடகி ரீடா தியாகராஜன் – விக்கிப்பீடியா

Singer Rita Thyagarajan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *