பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள் | Singer Rockstar Ramani Ammal

ரமணி அம்மாள் (Ramani Ammal) தனது மேடைபெயரான ராக்ஸ்டார் ரமணி அம்மாள் எனப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியும் ஆவார். 1954இல் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவர் 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர் முக்கியத்துவம் பெற்றார். ச ரி க ம ப சீனியஸ் நிகழ்ச்சியின் தொடக்க பதிப்பின் நடுவர்களிடமிருந்து “ராக்ஸ்டார்” என்ற புனைப்பெயரைப் பெற்றார். மேலும், இவர் காதல் (2004) என்றப் படத்தில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமானார்.


தொழில்


தமிழ்நாட்டின் சென்னையின் மேற்கு மாம்பலத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இரமணி அம்மாள் தனது குடும்ப பின்னணி காரணமாக படிப்பை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இவர் தனது இளம் வயதிலேயே இசையின் மீது ஆர்வத்தைக் கொண்டிருந்தார். ஆனால் வருமானம் ஈட்டுவதற்காக ஒரு வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்தார். இசையில் தனது ஆர்வத்தை உயிரோடு வைத்திருக்க திருமண விழாக்களிலும், கோவில் திருவிழாக்களிலும் பாடல்களையும் பாடிவந்தார். ஒரு படத்தில் ஒரு பாடலை பாடுவதற்கு முதல் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதி வீட்டுப் பணிபெண்ணாகவே இருந்தார். இவர் 2004இல் வெளியான காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு பாடகராக அறிமுகமானார். காத்தவராயன் (2008), தெனாவட்டு (2008), ஹரிதாஸ் (2013) ஆகிய பாடல்களிலும் இவர் பாடியுள்ளார். இருப்பினும் இவர் அதிக திரைப்பட வாய்ப்புகளைப் பெறவில்லை. இந்நிலையில் இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு அடிகளார் அவர்களின் 79 வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்கள் பாடினார். பின்னர், மீண்டும் ஒரு வேலைக்காரியாக வீட்டுப் பணிகளைச் செய்யச் சென்றார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி


2017 ஆம் ஆண்டில், இவர் தனது 63 வயதில் தனது ஜீ தமிழ் தொலைகட்சியின் ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பின்னர் மூத்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த பாடல் பற்றிய நிகழ்ச்சியின் முதல் பத்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான இவர், ஏப்ரல் 15, 2018 அன்று நடந்த இறுதி போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார். ச ரி க ம ப நிகழ்ச்சியுடனான வெற்றியைத் தொடர்ந்து, ஜூங்கா (2018), சண்டக்கோழி 2 (2018), காப்பான் (2019) மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா (2019) ஆகிய படங்களில் பாடுவதற்கான பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது மேடை நிகழ்ச்சிகளில் சிறுதும் தயக்கமின்றி நடுவர்கள், பார்வையாளர்கள், இரசிகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 2018 ஆம் ஆண்டில், தொலைக்காட்சித் தொடரான யாரடி நீ மோகினியின் ஒரு அத்தியாயத்திலும் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.


வெளி இணைப்புகள்

பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள் – விக்கிப்பீடியா

Singer Rockstar Ramani Ammal – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *