எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23, 1938) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. “எம்எல்ஏ” என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
குடும்பம்
இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
2010களில்
ஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.
2016ல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனாக்கள் படத்தில் இடம்பெற்ற அம்மா பூவினும் என்ற பாடல் எனது கடைசி பாடல் என்று அறிவித்தார்.
விருதுகள்
பத்மபூஷண் விருது மறுப்பு
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.
இந்திய தேசிய விருதுகள்
1976 | பதினாறு வயதினிலே |
---|---|
1980 | ஒப்போல் |
1984 | சித்தாரா |
1992 | தேவர் மகன் |
எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்
1962 | கொஞ்சும் சலங்கை |
---|---|
1962 | பாதகாணிக்கை |
1962 | சுமைதாங்கி |
1962 | ஆலயமணி |
1962 | போலீஸ்காரன் மகள் |
1963 | நெஞ்சம் மறப்பதில்லை |
1965 | திருவிளையாடல் |
1969 | அடிமைப்பெண் |
1970 | என் அண்ணன் |
1970 | எங்கிருந்தோ வந்தாள் |
1973 | பொண்ணுக்கு தங்க மனசு |
1974 | அவள் ஒரு தொடர்கதை |
1976 | அன்னக்கிளி |
1976 | உறவாடும் நெஞ்சம் |
1977 | அவர்கள் |
1977 | கவிக்குயில் |
1978 | அச்சாணி |
1978 | சிகப்பு ரோஜாக்கள் |
1978 | பிரியா |
1979 | தர்மயுத்தம் |
1980 | மூடுபனி |
1980 | ஜானி |
1981 | கிளிஞ்சல்கள் |
1981 | அலைகள் ஓய்வதில்லை |
1982 | காதல் ஓவியம் |
1982 | பயணங்கள் முடிவதில்லை |
1983 | ஆனந்த கும்மி |
1983 | மூன்றாம் பிறை |
1983 | இன்று நீ நாளை நான் |
1984 | உன்னை நான் சந்தித்தேன் |
1985 | கற்பூரதீபம் |
1985 | ஆண்பாவம் |
1985 | இதய கோவில் |
1985 | குங்குமச்சிமிழ் |
1985 | அந்த ஒரு நிமிடம் |
1986 | வசந்த ராகம் |
1987 | வேதம் புதிது |
1988 | அக்னி நட்சத்திரம் |
1988 | தாய் மேல் ஆணை |
1988 | என் ஜீவன் பாடுது |
1989 | அபூர்வ சகோதரர்கள் |
1989 | ஆராரோ ஆரிரரோ |
1989 | கரகாட்டக்காரன் |
1991 | புது நெல்லு புது நாத்து |
1992 | குணா |
1992 | வண்ண வண்ண பூக்கள் |
1993 | அரண்மனைக்கிளி |
1993 | ஜென்டில்மேன் |
1993 | எஜமான் |
1994 | காதலன் |
1995 | கர்ணா |
1998 | உயிரே |
1999 | முதல்வன் |
1999 | சங்கமம் |
1999 | ஜோடி |
2014 | வேலையில்லா பட்டதாரி |
2016 | திருநாள் |