பாடகி சரண்யா ஸ்ரீனிவாஸ் | Singer Sharanya Srinivas

சரண்யா ஸ்ரீனிவாஸ் (Sharanya Srinivas) (பிறப்பு 3 சனவரி 1991) ஒரு இந்திய பாடகராவார். இவர் தமிழ் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார். இவர் பிரபல பாடகர் சீனிவாசின் மகளாவார்.


தொழில்


சரண்யா, தனது இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர், இசைத் தொழிலைத் தேர்வுசெய்தார். ஒரு பாடகராக ஆவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஏ. ஆர். ரகுமானின் கே. எம் இசைப் பள்ளியில் இசைப் பாடம் பயின்ற இவர், ஹென்றி குருவிலாவின் கீழ் ஒரு இசைத் தயாரிப்பு பாடத்தையும் மேற்கொண்டார்.


ஒரு வளர்ந்த பெண்ணாக தமிழில் இவரது முதல் பாடல் பானி கல்யாணின் இசைத் தொகுப்பான “கொஞ்சம் காப்பி கொஞ்சம் காதல்” (2012), சத்ய பிரகாசுடன் இணைந்து “ஆதி தாகிரா” என்ற பாடலுடன் தொடங்கியது. ஏ. ஆர். ரகுமானுக்காக ராஞ்சனாவின் தமிழ் பதிப்பில் இவர் மீண்டும் பாடினார். “கலாரசிகா” மற்றும் “கனாவே கனாவே” என்ற இரண்டு கர்நாடகப் பாடல்களைப் பாடினார். முதல் பாடலை “தனது இதயத்திற்கு நெருக்கமானது” என்று விவரித்தார். விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிச்சரணுடன் இணைந்து கங்காரு என்ற படப்பாடலுக்காக தனது தந்தையின் இசையில்ல் இரண்டு பாடல்களையும் பாடினார். 2014 ஆம் ஆண்டில், பந்து திரைப்படத்தின் இரண்டு பாடல்களை இவர் பாடினார். அதைத் தொடர்ந்து ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்த :ராஜா மந்திரி”யில் ஒரு பாடல் இருந்தது.


பாராட்டு


கே.ஜே.யேசுதாசுடன் பாடிய இவரது பாடலுக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார், தி இந்து பத்திரிகையின் விமர்சகர் இவரிடம் “இனிமையான குரல்” இருப்பதைக் குறிப்பிட்டார்.


ஏ.ஆர்.ரஹ்மான், டி. இமான், சரத், சந்தோஷ் நாராயணன், நிவாஸ் பிரசன்னா, மேட்லி ப்ளூஸ் மற்றும் ஜஸ்டின் பிரபாகர் போன்ற தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வருகிறார்.


இவரது சமீபத்திய பாடல் வெளியீடு 2017 ஆம் ஆண்டில் அட்லீ இயக்கி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் இருந்தது.


வெளி இணைப்புகள்

பாடகி சரண்யா ஸ்ரீனிவாஸ் – விக்கிப்பீடியா

Singer Sharanya Srinivas – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *