பாடகர் சித் ஸ்ரீராம் | Singer Sid Sriram

சித் ஸ்ரீராம்(Sid Sriram) (பிறப்பு 19 மே 1992) ஒரு இந்திய அமெரிக்க இசை உருவாக்குநர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பாடல்கள் எழுதுபவரும் கூட. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக, இவர் புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் பல்லவி ஸ்ரீராம் உடன் இணைந்து பணியாற்றி வந்தார்.


தொடக்க கால வாழ்க்கை


இந்தியாவில், தமிழ்நாட்டில் சென்னையில் இவர் பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கருநாடக இசை ஆசிரியர் ஆவார். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008 ஆம் ஆண்டில் மிசன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்து இசைத் தயாரிப்பு மற்றும் இசைப் பொறியியலில் பட்டம் பெற்றார். தனது கல்லூரிக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வந்து டிசம்பர் மாத மார்கழி உற்சவங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார்.


தொழில் வாழ்க்கை


2013 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “அடியே” பாடலைப் பாடிய பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றார். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னோடு நீ இருந்தால்” பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.


“அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தில் இடம் பெற்ற “தள்ளிப் போகாதே”, “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் இடம் பெற்ற “மறு வார்த்தை பேசாதே”, “நின்னு கோரி” படத்தில் இடம் பெற்ற “அடிக்க அடிக்க” போன்றவை மிகவும் பிரபலமானவையாகும்.


வெளி இணைப்புகள்

பாடகர் சித் ஸ்ரீராம் – விக்கிப்பீடியா

Singer Sid Sriram – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *