பாடகர் சுக்விந்தர் சிங் | Singer Sukhwinder Singh

சுக்விந்தர் சிங் (Sukhwinder Singh) 1971 ஜூலை 18 அன்று பிறந்த ஒரு இந்திய பாலிவுட் பின்னணி பாடகர் ஆவார். 1998ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து குல்சார் எழுதிய, தில் சே திரைப்டத்திலிருந்து “சைய்யா சைய்யா” என்ற பாடலுக்காக 1999 ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை பெற்றவர். இந்த பாடலை சப்னா அவஸ்தியுடன் இணைந்து பாடியுள்ளார். சிங் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் “ஜெய் ஹோ” பாடலில் சர்வதேச புகழ் பெற்றார், இது சிறந்த பாடலுக்கான அகாடமி விருது மற்றும் மோஷன் பிக்சர், தொலைக்காட்சி அல்லது பிற காட்சி ஊடகத்திற்கான சிறந்த பாடலுக்கான கிராமி விருது வென்றது. 2014 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படமான ஹைடர் திரைப்படத்திற்கான அவரது பங்களிப்பு அவருக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது .


தொழில் வாழ்க்கை


சிங் ஆரம்பத்தில் பஞ்சாப், அம்ரித்ஸரில் இருந்து வந்தார். சிங் தனது 8 ஆவது வயதில் மேடை நாடகத்தில் பாட ஆரம்பித்தார், 1970 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படமான “அபினேத்திரி” என்ற படத்தில் இடம்பெற்ற ”கிஷோர் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோர் பாடிய “ச ரி க ம பா” என்ற பாடலை பாடினார். அவர், டி. சிங் என்பவருடன் இணைந்து “முண்டா சவுத்ஹால் டா” என்று ஒரு பஞ்சாபி இசைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இசைக் குழுவில் சேர்ந்தார். அந்த சமயத்தில், அவர் ரட்சகன் என்ற படத்தில் பாடினார்.


விருதுகள்


சுக்விந்தர் சிங் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தில் சே படத்தின் “சைய்யா சைய்யா” பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார், மற்றும் சலிம் சுலைமான் இசையில் ராப் நே பானா தி ஜோடி என்ற படத்தில் “ஹாலே ஹாலே” என்ற பாடலுக்காகவும் பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.


2014 ஆம் ஆண்டு வெளியான ஹைதர் திரைப்படத்தில் விஷால் பரத்வாஜ் இசையமைப்பில் பாடியதற்காக 62 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த ஆண் பின்னணி

வெளி இணைப்புகள்

பாடகர் சுக்விந்தர் சிங் – விக்கிப்பீடியா

Singer Sukhwinder Singh – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *