பாடகர் டி. எல். மகராஜன் | Singer T.L. Maharajan

டி. எல். மகராஜன் (பிறப்பு: 9 மார்ச் 1954) தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்.


வாழ்க்கைக் குறிப்பு


இவரின் பெற்றோர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் – ராஜலக்சுமி ஆவர். தனது 10ஆவது வயதில் வள்ளலார் எனும் நாடகத்தில் மகராஜன் முதன்முதலாகப் பாடினார். தனது 12ஆவது வயதில் திருவருட்செல்வர் திரைப்படத்தில் காதலாகிக் கசிந்து… எனும் பாடலை பின்னணியில் பாடினார்.


இசைப் பணி


திரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன், நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள் பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார்.

வெளி இணைப்புகள்

பாடகர் டி. எல். மகராஜன் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *