வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன. இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
பின்னணிப் பாடகர்
தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947 ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார். நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார். 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.
வெளி இணைப்புகள்
பாடகி வைக்கம் சரஸ்வதி – விக்கிப்பீடியா