பாடகர் யுகேந்திரன் | Singer Yugendran

யுகேந்திரன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.. மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.


வாழ்க்கை


இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். இவரது சகோதரி பிரசாந்தினி தமிழ் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வானொலியான சுவர்ண ஒலியில் பங்கேற்றபோது தன் வாழ்க்கைத்துணையான ஹேம மாலினியைக் கண்டார். இவரது மனைவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.


இசைப்பயணம்


சிறு வயதிலேயே இசை கற்ற இவர் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது உழவன் மகன் என்ற திரைப்படத்தில், தனது முதல் பாடலான ”செந்தூரப் பூவே”யில், ஆடுமேய்க்கும் சிறுவனின் குரலில் பாடினார். பொள்ளாச்சி சந்தையிலே என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகினார். பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார்.


திரைப்பயணம்


இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் ”மேகலா” மற்றும் “இதயம்” ஆகிய தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.


நடிகராக

2001 பூவெல்லாம் உன் வாசம்
2002 யூத்
பகவதி
2003 ஸ்டூடண்ட் நம்பர் 1
கையோடு கை
அன்பே அன்பே
2004 ஒரு முறை சொல்லிவிடு
மதுர
2005 திருப்பாச்சி
உள்ளக்காதல்
அலையடிக்குது
2007 முதல் கனவே
2008 னெஞ்சத்தைக் கிள்ளாதே
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
பச்சை நிறமே
2009 ராஜாதி ராஜா
நியூட்டனின் மூன்றாம் விதி
2011 யுத்தம் செய்
2012 காதலானேன்
காதல் சாம்ராஜ்ஜியம்

பாடகராக

பாடலின் பெயர் இசைக்கோவை
ஏ சம்பா ஏ சம்பா பாண்டவர் பூமி
ஆடி ஆடி வாம்மா இந்திரன்
அடிடா கோவா
ஆட்டோகிராப் ஐ லவ் யூ டா
கரோலினா காதல் சடுகுடு
செர்ரி செர்ரி லவ் சேனல்
என்ன பார்க்கிறாய் தவமாய் தவமிருந்து
கல்யாணம்தான் கட்டிகிட்டு சாமி
கிழக்கே பார்த்தேன் ஆட்டோகிராப்
கோடைமலை மேல வச்சு கண்ணன் வருவான்
கோழி வந்ததா ஆஹா
மெக்கி மெக்கி காதல் திருடா
முல்லைப் பூ காதல் சாம்ராஜ்ஜியம்
முதல் முதலாய் லேசா லேசா
நெஞ்சத்தைக் கிள்ளாதே நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஒ ஷல்லல்லா ஜமாய் ஜூனியர் சீனியர்
ஓ.. மரியா காதலர் தினம்
ஒரு மாதிரி கீ மோ
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன்
பார்த்தே பார்த்தே ரிலாக்ஸ்
பிகாசோ ஓவியம் ராயல் பேமிலி
பொட்டல்ல காதிலே காதல் ஜாதி
ரோசாப்பூ உதட்டுல தமிழ்
சுடும்வரை நெருப்பு ஜனனம்
சுத்துதே சுத்துதே நேபாளி
பொள்லாச்சி சந்தையிலே ரோஜாவனம்
விளக்குவொன்னு திரிய பார்க்குது தேவதையைக் கண்டேன்

இசை இயக்குனராக

2007 வீரமும் ஈரமும்
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே
2009 பலம்
2011 நெல்லை சந்திப்பு
2012 காதலானேன்

வெளி இணைப்புகள்

பாடகர் யுகேந்திரன் – விக்கிப்பீடியா

Singer Yugendran – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *