அபயா கிரன்மயி (Abhaya Hiranmayi) (பிறப்பு: 1989 மே 24) இவர் ஓர் இந்திய பின்னணி பாடகராவார். இவர் பல பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மலையாள மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட இசைக்கு பின்னணிக் குரலை வழங்கியுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
திருவனந்தபுரத்தில் பிறந்த கிரன்மயி இசையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை, என்றாலும், இசையில் முதுகலை பட்டதாரியும் மற்றும் பேராசிரியருமான நெய்யாற்றிங்கரை எம். கே. மோகனச்சந்திரனின் சீடரான இவரது தாய் இலத்திகாவிடமிருந்து இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் பேராசிரியரான இவரது சிறிய தந்தை நடத்திய இசைப் பாடங்களை கேட்டு மேலும் இசை அறிவைப் வளர்த்துக் கொண்டார். இவரது தந்தை ஜி. மோகன், தூர்தர்ஷன் கேந்திரத்தின் நிகழ்ச்சிநிரல் தயாரிப்பாளராக இருந்தார்.
கிரன்மயி திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். அங்கு இவர் கார்மல் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவர் இசையை ஒரு தொழிலாகத் தொடர படிப்பை கைவிட்டார்.
தொழில்
கிரண்மயி 2014 ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் மலையாள திரைப்படப் பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார் . ஒரு சுவாகிலி பேச்சுவழக்கில் காப்பு குரல்களை வழங்குவதன் மூலம், பெயரிடப்பட்ட படத்தின் ‘நகு பெண்டா, நகு தகா’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து திலீப் – மம்தா மோகன்தாஸ் நடித்த டூ கண்ட்ரீசு என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தானே தானே’, என்ற பாடலுக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இவரது குரலை பாடலுக்கு இடையே பயன்படுத்தினார். அதே ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான ‘மல்லி மல்லி இதி ராணி ரோஜு’ என்றத் திரைப்படத்திர்காக ‘சோதி ஜிந்தகி’ என்ற பாடலை இவர் பாடினார். 2016 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் & ஆலிஸ் இயக்கத்தில் வெளியான படத்திற்காக பாடகர் கார்த்திக்குடன் இணைந்து ‘மழையேயே மழையே’ என்ற காதல் பாடலைப் பாடினார். அதைத் தொடர்ந்து மறைந்த தீபன் இயக்கிய சத்யாவும், அடுத்த ஆண்டில், கோயிகோடிற்கான ஒரு பாடலான கோழிக்கோடு என்ற பாடல் மற்றும் கோபி சுந்தரின் இசையில் வெளியான ‘குடலோச்சனா’ என்ற படத்திற்கான பாடல் போன்றவை. பாடலில் சிறந்து விளங்குவதற்காக ஆசியாவிசன் விருதினை முதன் முதலில் பெற்றார்.
வெளி இணைப்புகள்
பாடகி அபயா கிரன்மயி – விக்கிப்பீடியா