அஜீஸ் (அஜீஸ் அசோக்) என்பவர் சென்னையை சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
அஜீஸ் விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பில் வெற்றியாளராக தேர்வானவர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் பலனாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கோவா படத்தில் இது வரை.. என்ற பாடலை ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் இணைந்து பாடினார்.