பாடகி அம்ருதா சுரேஷ் | Singer Amrutha Suresh

அமிர்தா சுரேஷ் (Amrutha Suresh) என்றும் (பிறப்பு: 1990 ஆகத்து 2) அம்ரிதா என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய பாடகியும், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் வானொலி நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஒரு உண்மை நிகழ்ச்சியில் பாடும் போட்டியான ஐடியா ஸ்டார் சிங்கரில் பங்கேற்ற பிறகு இவர் பிரபலமடைந்தார். அப்போதிருந்து, இவர் பல படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகளில் பாடி இசையமைத்துள்ளார். ரேடியோ சுனோ 91.7 என்ற பண்பலையில் சுனோ மெலடிஸ் என்ற இசை நிகழ்ச்சியுடன் பிரபல வானொலித் தொகுப்பாளாராக இருந்துள்ளார். 2014ஆம் ஆண்டில், இவர் அம்ருதம் கமய் என்ற இசை இசைக்குழுவை நிறுவினார். இதில் அம்ருதாவும் இவரது சகோதரி அபிராமியும் முன்னணி பாடகர்களாக உள்ளனர். யூடியூபபில் பிரசித்தி பெற்ற விலாக்கிங் ஏஜி என்றத் தொடர் நிகழ்ச்சியின் மூலம் நன்கு அறியப்படுகிறார்கள் .


ஆரம்ப கால வாழ்க்கை


அம்ருதா 1990 ஆகத்துட் 2 ஆம் தேதி இசைக்கலைஞர் பி.ஆர்.சுரேஷ் மற்றும் லைலா ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை சுரேஷ் ஒரு இந்து, தாய் லைலா ஒரு கிறிஸ்தவர் ஆவார். இவருக்கு ஐந்து வ்யது இளையவரான அபிராமி என்ற ஒரு சகோதரி இருக்கிறார். அபிராமியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இவர்கள் கொச்சியின் இடப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் . இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் (தந்தைவழி) வாழ்வது சிறு வயதிலிருந்தே இசையைத் தொடர ஊக்கமளித்தது. அம்ருதா தனது மூன்றாம் வயதிலேயே பாட ஆரம்பித்தார்; செலின் டியான் மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகியோர் ஒரு பாடகியாக மாற இவரை பாதித்த பாடகர்கள் ஆவர். அம்ருதா பள்ளிகளில் படிக்கும்போதே முதலிடம் பிடித்தவர். தொலைக்காட்சியின் ஒரு உண்மை நிகழ்ச்சியில் பாடும் போட்டியான ஐடியா ஸ்டார் சிங்கரில் போட்டியிடுவதற்காக இவர் தனது 12 ஆம் வகுப்பை கைவிட்டாலும், பின்னர் இவர் தனிப்பட்ட முறையில் படிப்பை முடித்தார். பின்னர் இவர் வணிக நிர்வாக இளங்கலை மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பட்டங்களையும் பெற்றுள்ளார்.


தொழில்


இசை


ஒரு இசைக்கலைஞரின் குடும்பத்திலிருந்து வந்த இவர், தனது குழந்தை பருவத்திலேயே மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போது, இவர் நாதிர்ஷாவின் மேடை நிகழ்ச்சிகளில் குழந்தை பாடகியாக பங்கேற்றார். 2007ஆம் ஆண்டில், அம்ருதா 2007ஆம் ஆண்டில் ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஒரு உண்மை நிகழ்ச்சியில் பாடும் போட்டியான ஐடியா ஸ்டார் சிங்கரில் பங்கேற்ற பிறகு இவர் பிரபலமடைந்தார். இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு உதவியது. அதன் பின்னர், இவர் பல மலையாள படங்களில் பின்னணி பாடியுள்ளார். அனில் கே. நாயர் எழுதி இயக்கிய 2010 இல் வெளியான மலையாள மொழித் திரைப்படமான புள்ளிமான் என்பதில் பின்னணிப் பாடகராக அறிமுகமானர். ஆகாதன் (2010) திரைப்படத்தின் “முந்திரிப்பூ” பாடல் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.


தனிப்பட்ட வாழ்க்கை


அம்ருதா தனது வருங்கால கணவர் பாலாவை முதன்முதலில் வேணல்மரம் படத்தின் படபிடிப்புத் தளத்தில் சந்தித்தார். பின்னர், இவர்கள் தொலைக்காட்சியின் பாடும் போட்டியான ஐடியா ஸ்டார் சிங்கரில் போட்டியிடும் சந்தித்து தங்களுக்குள் காதலை வளர்த்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு பிரபல நடுவராக இருந்தார். இவர் குடும்பத்தின் ஒப்புதலுடன் 2010 ஆகத்து 27 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கொச்சியின் பலரிவத்தத்தில் வசித்து வந்தனர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2015ஆம் ஆண்டில் தனித்தனியாக வாழத் தொடங்கியதாகவும், 2019 திசம்பரில் சட்டப்பூர்வ விவாகரத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு அவந்திகா (பிறப்பு 2012) என்ற மகள் உள்ளார். இசையைத் தவிர, இவர் ஒரு பயண ஆர்வலரும் கூட.

வெளி இணைப்புகள்

பாடகி அம்ருதா சுரேஷ் – விக்கிப்பீடியா

Singer Amrutha Suresh – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *