அனுராதா பாட்வால்; (Anuradha Paudwal, 27 அக்டோபர், 1954) இந்தியப் பின்னணிப் பாடகியாக பாலிவுட் திரையுலகில் பணிசெய்பவர் ஆவார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை 2017 ஆம் ஆண்டு பெற்றவர். தேசியத் திரைப்பட விருதினையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் பெறுள்ளார்.
குடும்பம்
அனுராதா, கர்நாடக மாநிலத்தில் (முந்தைய பாம்பே மாகாணம்),உத்திர கன்னடாவில், கார்வார் என்ற இடத்தில், அக்டோபர் 27, 1954 இல் பிறந்தார். கொங்கணிக் குடும்பத்தைச் சேந்த இவர் மும்பையில் வளர்ந்தார். சிறு வயது முதலே லதா மங்கேஷ்கரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு பள்ளியில் படிக்கும் காலத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய மீரா பஜனைகள் பாடிப் பரிசு பெற்றார். அருண் பாட்வால் என்ற இசையமைப்பாளரைக் காதலித்து மணந்துகொண்ட இவருக்கு ஆதித்யா பாட்வால் என்ற மகனும், கவிதா பாட்வால் என்ற மகளும் உள்ளனர். கவிதா பாட்வாலும் ஒரு பாடகியாவார்.
விருதுகளும் அங்கீகாரமும்
பிலிம்பேர் விருது
1983: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1984: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1989: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1990: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1990: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1991: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1993: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1986: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1991: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1992: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
1993: சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது
தேசியத் திரைப்பட விருதுகள்
1989: சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது
1987: சிறந்த பாடகருக்கான ஒடிசாமாநில திரைப்பட விருது
1997: சிறந்த பாடகருக்கான ஒடிசாமாநில திரைப்பட விருது
கில்ட் திரை விருது
2004: சிறந்த பின்னணிப் பாடகிக்கான அப்சராவின் கில்ட் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
மற்றவை
அனுராதாவுக்கு பத்மஸ்ரீ டாக்டர் டி.ஒய். பட்டீல் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.