பென்னி தயாள் (மலையாளம்: ബെന്നി ദയാൽ) ஆங்கில மொழி: Benny Dayal பிறப்பு 13 மே 1984) என்பவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல் படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். திரைப்பட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பென்னி தயாளின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார்.
பல்லே லக்கா பல்லே லக்கா, டாக்சி டாக்சி, ஓ மணப் பெண்ணே போன்ற இவர் பாடிய பாடல்கள் திரை உலகில் பெயர் பெற்றன. பென்னி தயாள் நடனம் ஆடுவதிலும் விருப்பமும் ஆற்றலும் கொண்டவர். துபாயில் வளர்ந்து பள்ளிக் கல்வியை அங்கு முடித்தார்.
வெளி இணைப்புகள்
பாடகர் பென்னி தயாள் – விக்கிப்பீடியா