ஜாவத் அலி (Javed Ali (இந்தி: जावेद अली, உருது: جاوید علی, பிறப்பு: ஜூலை 5, 1982) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்திப் பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் திரைப்படத்தில் ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். இந்தி, வங்காள மொழி, ஒடியா மொழி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்திய மொழி, அசாமிய மொழி என இவர் பல மொழிகளில் பின்னணிப் பாடல் பாடியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு (பாடல் நிகழ்ச்சி) நடுவராக இருந்துள்ளார்., ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஜாவத் அலி (இயற்பெயர் : ஜாவத் உசைன் ) உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக புது தில்லியில் பிறந்தார். தனது இளம்வயது முதலே கவ்வாலி பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது தந்தையுடன் இணைந்து பாடினார். தனது தந்தை தன்னைக் கீர்த்தனைகள் பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். கசல் (இசை) புகழ் குலாம் அலி (பாடகர்) ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார்.
தமிழ் பாடல்கள்
2009
யுவன் சங்கர் ராஜா இசையில் வாமணன் திரைபடத்தில் ஏதோ செய்கிறாய் என்ற பாடல், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் (சின்னஞ் சிறுசுக) பாடல்,யுவன் சங்கர் ராஜா இசையில் சர்வம் ( சிறகுகள்) என்ற மூன்று பாடல்களைப் பாடினார்.
2010
நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) ஒரு மாலை நேரம் ,எந்திரன் (திரைப்படம்) (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடினார்.
2011
யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜபாட்டை( பனியே பனிப் பூவே) தமன் (இசையமைப்பாளர்) இசையில் தடையறத் தாக்க(காலங்கள்) , ஹாரிஸ் ஜயராஜ் இசையில் நண்பன் (2012 திரைப்படம்)(இருக்கானா) , டி. இமான் இசையில் மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) (போ போ)
2012
ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மாற்றான் (திரைப்படம்)(கால் முளைத்த பூவே) மற்றும் துப்பாக்கி (திரைப்படம்)(அலைக்க லைக்கா)
யுவன் சங்கர் ராஜா இசையில் ஆதலால் காதல் செய்வீர் (தப்புத் தண்டா) மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) (ரைய்யா ரைய்யா)
2013
2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஏ. ஆர். ரகுமான்அவர்களின் இசையில் மரியான்- (சோனாபரியா) மற்றும் ராஞ்சனா (ஒளியாக வந்தாய்)
தேவி ஸ்ரீ பிரசாத்இசையில் சிங்கம் 2 (திரைப்படம்) (கண்ணுக்குள்ளே) யுவன் சங்கர் ராஜாஇசையில் ஆல் இன் ஆல் அழகு ராஜா (ஒரே
ஒரு)
2014
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)(காதல் நேர்கையில்) சிவமணி இசையில் அரிமா நம்பி (இதயம் என் இதயம்)
2017
ஹாரிஸ் ஜயராஜ் இசையில் சி3 (திரைப்படம்) (ஒ சோனே சோனே) கே பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையில் இந்திரசித்து (விடிகிற வானில் கொடிகளை) எனும் பாடலைப் பாடியுள்ளார்.
இந்திப் பாடல்கள்
தொலைக்காட்சித் துறை
விருதுகள்
வென்ற விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
மராத்தியப் பாடல்கள்
2010 – காதி காதி
2011- ஜட்லே நாடே
2013- மௌலா மௌலா
2014- சரா சரா