ஜென்சி அந்தோனி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான சில பாடல்களைப் பாடியுள்ளார்.
தொழில் வாழ்க்கை
ஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில் இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது. தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த எண்ணியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரைப் பற்றிக் கேள்விப்படவே, இவரைத் தாம் இசையமைத்துக் கொண்டிருந்த “திரிபுரசுந்தரி” என்ற படத்தில் “வானத்துப் பூங்கிளி” என்ற பாடலைப் பாட அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்து “முள்ளும் மலரும்”, “பிரியா போன்ற வெற்றிப்படங்களில் பாடினார். 1978 முதல் 1982 வரை பல வெற்றிப்படங்களில் பாடிக் கொண்டிருந்த இவர், திருமணத்துக்குப் பிறகு திரைப்படத் தொழிலைக் கைவிட்டுவிட்டுக் கிறித்தவச் சமயப் பாடல்களை மட்டும் பாடத் தொடங்கினார்.
இல்வாழ்க்கை
ஜென்சி 1983 இல் கிரெகரி தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார். அவருக்கு நித்தின் என்ற மூத்த மகனும், நூபியா என்ற இளைய மகளும் இருக்கிறார்கள்.
பாடிய சில பாடல்கள்
1978 | திரிபுரசுந்தரி |
---|---|
முள்ளும் மலரும் | |
வட்டத்துக்குள் சதுரம் | |
சொன்னது நீதானா | |
ப்ரியா | |
1979 | புதிய வார்ப்புகள் |
புதிய வார்ப்புகள் | |
நிறம் மாறாத பூக்கள் | |
நிறம் மாறாத பூக்கள் | |
அன்பே சங்கீதா | |
கடவுள் அமைத்த மேடை | |
பகலில் ஒரு இரவு | |
அழகே உன்னை ஆராதிக்கிறேன் | |
முகத்தில் முகம் பார்க்கலாம் | |
பூந்தளிர் | |
1980 | எல்லாம் உன் கைராசி |
ஜானி | |
கரும்பு வில் | |
உல்லாசப்பறவைகள் | |
1981 | டிக் டிக் டிக் |
அலைகள் ஓய்வதில்லை | |
அலைகள் ஓய்வதில்லை | |
அலைகள் ஓய்வதில்லை | |
பனிமலர் | |
1982 | ஈர விழி காவியங்கள் |
எங்கேயோ கேட்ட குரல் | |
மெட்டி | |
பூத்து நிக்குது காடு | |
ஆத்தோரம் காத்தாட | |
பூச்சூடிப் பொட்டும் வெச்சு |
வெளி இணைப்புகள்
பாடகி ஜென்சி அந்தோனி – விக்கிப்பீடியா
Singer Jency Anthony – Wikipedia